பேபி நடிகைக்கு அங்கேயும் சிக்கல்.. ஒல்லி பெல்லி வச்ச ரகசிய நைட் பார்ட்டி.. அப்போ அதுவும் போச்சா?

By Staff

மும்பை: கோவில் மணியை அடிப்பது போல அந்த பேபி நடிகை தொடர்ந்து மும்பையில் உள்ள அனைத்து தயாரிப்பு நிறுவனங்களின் காலிங் பெல்லையும் அமுக்கி வருகிறார். ஆனால், நடிகைக்கு தான் கடந்த 6 மாதங்களாக முயற்சித்தும் யாரும் க்ரீன் சிக்னல் காட்டாமல் இழுத்து அடித்து வருவதாக கூறுகின்றனர்.

மும்பையில் ஒரு பெரிய நடிகர் படத்தில் எப்படியாவது அடுத்த ஹீரோயின் நாம தான் என நம்பிக் கொண்டிருந்த நடிகைக்கு டோலிவுட்டில் இருந்து அந்த ஒல்லி பெல்லி நடிகையை அனுப்பி ஆப்பு வைக்க பேபி நடிகைக்கு கட்டம் கட்டும் நபர்கள் திட்டம் போட்டு ஸ்கெட்ச் போட்டு இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

gossips kollywood actress gossips

எந்த ஸ்டேட்டுக்கு சென்றாலும் கூடவே ஏழரை வந்து டார்ச்சர் கொடுப்பது போல நடிகைக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் இருந்து வரும் நிலையில், பாலிவுட்டில் எப்படியும் பட வாய்ப்பை தட்டித் தூக்கலாம் என நடிகை போட்ட கணக்குக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒல்லி பெல்லி நடிகை நைட் பார்ட்டி ஒன்றை நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு நோ: பேபி நடிகை சினிமாவில் தனக்கு இருக்கும் எக்ஸ்பீரியன்ஸை பயன்படுத்தி தான் வாய்ப்புகளை கேட்டு வருகிறார். ஆரம்ப காலத்தில் பண்ணது போல இப்போதெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டிய நிலை தனக்கு இல்லை என்பதை உறுதியாக நம்புகிறார். நடிகையிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்த விஷயத்தை யாராவது எதிர்பார்த்தாலே சிக்கலாகி விடும் என்பதால் யாருமே அது குறித்து நடிகையிடம் பேசவே மாட்டார்கள் என்கின்றனர்.

ஒல்லி பெல்லி நடிகையின் தாராளம்: ஆனால், பேபி நடிகைக்கு போட்டியாக களமிறக்கப்பட்டு இருக்கும் ஒல்லி பெல்லி நடிகை கவர்ச்சியில் மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரத்திலும் தாராளம் காட்டி வருவதால், அவரை வைத்து கேம் ஆடி வருவதாக கூறுகின்றனர். அவரும் முதல்முறை பாலிவுட் வாய்ப்பை தட்டி பறிக்க தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

நைட் பார்ட்டி: பேபி நடிகை கடந்த ஒரு மாதமாக அடிக்கடி அந்த பெரிய நடிகரை சந்தித்து அவரது படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தி கடைசி ரவுண்ட் பேச்சு வார்த்தைக்கு தயாராகி இருந்த நிலையில், மும்பைக்கு போன கையோடு அந்த நடிகருக்கு நைட் பார்ட்டி வைத்து அவருடன் நட்பாக பழகி அந்த வாய்ப்பை அசால்ட்டாக ஒல்லி பெல்லி நடிகை தட்டிப் பறிக்க போகிறார் என்கிற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X