»   »  அது அப்போ, இப்போ நான் அப்படி இல்லீங்க: தயாரிப்பாளர்களிடம் மன்றாடும் நடிகை

அது அப்போ, இப்போ நான் அப்படி இல்லீங்க: தயாரிப்பாளர்களிடம் மன்றாடும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் முன்னாடி தான் கிளாமராக நடித்தேன் தற்போது கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறேன் என்று மில்க் பியூட்டி நடிகை தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மில்க் பியூட்டி நடிகை பாலிவுட் பக்கமும் சென்றார். ஆனால் அங்கு சரியான வரவேற்பு இல்லை. தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்த மாதம் ரிலீஸாகும் பிரமாண்ட படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார். அவர் கையில் ஒரேயொரு தமிழ் படம் மட்டுமே உள்ளது.

பட வாய்ப்புகள் வருவது இல்லை. இந்நிலையில் அவரை தேடி கூடுதல் கிளாமராக நடிக்கக் கேட்டு ஆட்கள் வருகிறார்கள். ஏங்க, நான் நடிக்க வந்த புதிதில் கிளாமர் காட்டினேன் அது அப்போ, இப்போ கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறேன் என்கிறாராம்.

பிரமாண்ட படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்பதால் தனது மார்க்கெட் பிக்கப்பாகும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் நடிகை.

English summary
A young actress is not ready to act in glamourous roles as she is no longer interested in it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil