»   »  நடிச்சோமா, போனோமான்னு இரு, இல்ல...: பைனான்சியரை திட்டிய நடிகைக்கு மிரட்டல்

நடிச்சோமா, போனோமான்னு இரு, இல்ல...: பைனான்சியரை திட்டிய நடிகைக்கு மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிச்சோமா, போனோமான்னு இரு, இல்ல...: பைனான்சியரை திட்டிய நடிகைக்கு மிரட்டல்- வீடியோ

சென்னை: பைனான்சியரை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகையை கோலிவுட்காரர்கள் மிரட்டுகிறார்களாம்.

கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் அதற்கு காரணமான பைனான்சியரை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டார்.

கமெண்ட்டிலும் கெட்ட வார்த்தையால் திட்டினார். இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் இருந்து மிரட்டல்கள் மேல் மிரட்டல்கள் வருகின்றதாம். வந்தோமா, நடிச்சோமா, சென்றோமா என்று இருக்கணும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட்ட அவ்வளவு தான் என்று அவருக்கு செல்போன் மூலமாகவும், நேரிலும் வசை விழுகிறதாம்.

இருக்கிற வரைக்கும் ஒழுங்கா இரு என்று மிரட்டுகிறார்களாம். யார் என்ன மிரட்டினால் என்ன நான் திட்டியதில் தப்பே இல்லை என்று நடிகை தில்லாக இருக்கிறாராம்.

அடியாத்தி, இந்த புள்ளைக்கு இம்புட்டு தைரியமா என்று சக நடிகைகள் மிரளுகிறார்கள்.

English summary
A young actress is reportedly receiving threats via phone and in person for scolding a popular financier on twitter. A producer committed suicide accusing the financier of torturing him.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil