டாப் நடிகருக்கு அந்த கால் அழகியை ஜோடியாக்க எடுத்த முயற்சி வீணாப்போச்சாம்.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகைகள் போட்டா போட்டிக் கொண்டு அந்த டாப் நடிகருடன் ஜோடி சேர துடித்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டதாம்.
இளம் நடிகைகள் தற்போது அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே தயங்கி வருகிறார்களாம்.
அந்த காரணத்திற்காகத்தான் வட இந்தியாவில் இருந்து வயதான நடிகைகளை ஜோடியாக்கி வருகின்றனர் என்றும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் தீயாக பரவி வருகிறது.

உச்ச நடிகருக்கே
கோலிவுட்டின் உச்ச நடிகருக்கே இந்த வயதிலும் இளம் நடிகைகளை ஜோடியாக்கி வருகின்றனர். ஆனால், சமீப காலமாக டாப் நடிகருக்கு இளம் நடிகைகளை ஜோடியாக்குவதில் பெரும் பிரச்சனையே உருவாகி உள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் பயங்கரமாக அடிபட தொடங்கி உள்ளன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

வயதான நடிகைகள்
இனிமேல் சின்ன வயசு நடிகராக நடிக்க தான் தயாராக இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்ட அந்த டாப் நடிகருக்கு அவருக்கு ஏற்றார் போல வயதான தோற்றம் கொண்ட நடிகைகளே தொடர்ந்து புக் செய்து வரும் நிலைக்கு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர். கோலிவுட்டில் வயதான நடிகைகளே இளம் நாயகிகள் போல மேக்கப் செய்து கொண்டு உடல் எடையை குறைத்துக் கொண்டு திரிவதால் தான் வட இந்தியா பக்கமே நடிகைகள் வேட்டையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மாற்ற நினைத்த இயக்குநர்
நடிகரை எப்படியாவது இளைஞராக காட்டிவிடலாம் என முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் ஏகப்பட்ட டை அடிக்கும் வேலைகளை பார்த்த இயக்குநருக்கு கடைசி வரைக்கும் அவர் நினைத்தது போல யங் ஹீரோயினை புக் செய்ய முடியவில்லையாம். தயாரிப்பாளர் சிபாரிசில் கிடைத்த அந்த நடிகைக்கு எதுக்கு டூயட் என அதையும் கட் செய்து விட்டாராம் இயக்குநர்.

கால் அழகியை கடத்த
மாஸ் நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் அந்த கால் அழகி நடிகை தான் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரை கடத்தி வந்து தனது படத்தில் நடிக்க வைக்க நினைத்து இயக்குநர் போட்ட திட்டங்களும் தற்போது தவிடு பொடியாகி உள்ளதாம்.

நோ மீன்ஸ் நோ
மூன்றாவது முறையாக டாப் நடிகரின் படத்தை இயக்கப் போகும் அந்த இயக்குநர், எப்படியாவது இந்த படத்தில் யங் ஹீரோயின் உடன் வேலை பார்த்து விட வேண்டும் என்கிற கனவில் மிதந்த நிலையில், டாப் நடிகரிடமும் கதை ரீதியாக பேசி ஒரு வழியாக சம்மதம் வாங்கி விட்டாராம். ஆனால், நடிகை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த சென்ற இடத்தில் இப்போதைக்கு கால்ஷீட் இல்லை என பிக் 'நோ' சொல்லிவிட்டாராம் அந்த கால் அழகி.

என்ன காரணம்
மாஸ் நடிகருக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், அடுத்து டாப் நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டாரா? அல்லது உண்மையாகவே கால் அழகிக்கு கால்ஷீட் பிரச்சனை இருக்கா? என பல கேள்விகள் கோடம்பாக்கத்தை சுற்றி வருகின்றன. இன்னொரு இளம் நடிகையை தேடி வலை வீசி வருகிறார் அந்த இயக்குநர்.


Click it and Unblock the Notifications











