சர்ச்சை, பெரிய இடத்து பகை: தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடும் நடிகை
சென்னை: நடிகை ஒருவரை திரையுலகினர் மெல்ல மெல்ல ஒதுக்கி வருகின்றனர்.
அழகும், திறமையும் உள்ள நடிகை அவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார். உடல்நலம் தான் முக்கியம் என்று பார்ப்பவர்களிடமும் கூறுவார். அவரின் கெரியர் அண்மை காலமாக மரண அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த நடிகை நடித்த பல படங்கள் ஓடவில்லை. அதனால் அவரை ராசியில்லாதவர் என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் நடிகை செய்யும் சில தவறுகளால் அவரின் கெரியர் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை தேடி வரும் பட வாய்ப்புகள் அப்படியே யு டர்ன் அடித்து வேறு எந்த நடிகையிடமாவது சென்றுவிடுகிறது.

நடிகை
நடிகையின் கதை தேர்வு சரியில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை பெரிய வீட்டு பெண் ஒருவரின் மார்க்கெட்டை கைப்பற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனாலும் பெரிய இடத்து பகை எதற்கு என்று அவர்களுக்கு உண்மையான இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நடிகையை ஒதுக்குகிறார்களாம்.

சீனியர்கள்
நடிகை தனது மார்க்கெட்டை சரி செய்ய சீனியர் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். அப்படி அவர் ஒரு சீனியருக்கு ஜோடியாக நடித்ததால் இளம் ஹீரோ ஒருவரின் படம் கைவிட்டுப் போனது. மேலும் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு தற்போது வேறு ஒரு நடிகைக்கு சென்றுவிட்டது.

சர்ச்சை
ஏற்கனவே நடிகையின் கெரியர் அடிவாங்கும் நிலையில் அம்மணியின் பெயர் சர்ச்சையான விஷயம் ஒன்றில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் பெரிய இடத்துப் பிள்ளை ஒருவரை அவர் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த பெரிய இடத்துப் பிள்ளையின் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக உள்ளது. இந்நிலையில் நடிகையும் அந்த பெரிய இடத்து பிள்ளையின் காதலிகள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

வதந்தி
நடிகை இப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார். இது போதாது என்று சில இளம் நடிகைகள் வேறு அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி அவரின் இமேஜை டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மணி பெரிய எதிர்பார்ப்புடன் நடித்த படம் ஒன்றில் அவருடன் சேர்ந்து நடித்த சீனியர் நடிகை பெயர் வாங்கிச் சென்றுவிட்டார். நடிகையை யாருமே கண்டுகொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications