»   »  அடப்பாவமே, நம்பர் நடிகையின் இந்த காதலும் முறிந்துவிட்டதா?

அடப்பாவமே, நம்பர் நடிகையின் இந்த காதலும் முறிந்துவிட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய நம்பர் நடிகைக்கும், இயக்குனருக்குமான காதல் முறிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெரிய நம்பர் நடிகையின் சினிமா வாழ்க்கை டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரது காதல் வாழ்க்கை தான் பாவம் அவ்வப்போது அடிவாங்கிக் கொண்டிருக்கிறது.

முதலில் விரல் வித்தை நடிகரை காதலித்து பிரிந்தார். அதன் பிறகு ரப்பர் பாடியை காதலித்து திருமணம் வரை சென்று பிரிந்துவிட்டார். இதையடுத்து சினிமா படங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்தார்.

அவர் விட்டாலும் அவரை காதல் விடவில்லை. இந்நிலையில் அவர் இளம் இயக்குனர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் இயக்குனரும், நடிகையும் பிரிந்துவிட்டார்களாம். இந்த காதலும் ஒர்க்அவுட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. காதலில் மட்டும் நடிகைக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.

English summary
Buzz is that number actress and young director have parted their ways thus putting an end to their love life.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil