முரண்டு பிடிக்கும் நடிகை: காரணம் இளம் இயக்குனர்?
சென்னை: நீர்வீழ்ச்சி நடிகை புதுப்படங்களை ஒப்புக் கொள்ளாததற்கு வேறு காரணம் கூறப்படுகிறது.
நீர்வீழ்ச்சி படம் மூலம் பிரபலமான அந்த மூன்றெழுத்து நடிகை புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. அவரை தேடி பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும் நடிகை தட்டிக்கழிக்கிறார். கேட்டால் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்கிறார். ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை நிராகரித்துள்ளார்.
இப்படியே போனால் இயக்குனர்கள் அவரை ஒதுக்கிவிடுவார்கள். நடிகையின் இந்த செயலுக்கு பின்னால் அந்த இளம் இயக்குனர் இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இயக்குனர் சொல்படி தான் நடப்பாராம் நடிகை. அவர் சொல்லித் தான் நடிகை புதுப்படங்களை ஏற்காமல் இருப்பதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications