அச்சச்சோ.. கிரிக்கெட் வீரருடன் ஒரே ஹோட்டலில்.. இளம் நடிகையின் அடுத்த டார்கெட் இவர் தானாம்!

By Staff

மும்பை: ஏற்கனவே சில கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கி பழகி வந்த அந்த இளம் நடிகை சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே இரவு முழுக்க டேரா போட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகைகள் பெரும்பாலும் தொழிலதிபர்களுடன் டேட்டிங் செல்வது, இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்வது என தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை படு ரகசியமாக பார்த்துக் கொள்வார்கள்.

Young actress stayed with Cricketers hotel room for a full night

ஒரு சில நடிகைகளுக்கு சினிமா பிரபலங்களை தாண்டி கிரிக்கெட் வீரர்களை ரொம்பவே பிடித்துப் போகும் நிலையில், அவர்களுடன் நெருக்கமாக பழகி வருகின்றனர். இந்நிலையில், அந்த இளம் நடிகை தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவருடன் ரொம்பவே நெருக்கமாக இருந்து வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கிரிக்கெட் சீசன் வேறு ஆரம்பித்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு திடீரென அந்த இளம் கிரிக்கெட் வீரரை சந்திக்க அவரது அறைக்கே சென்றுள்ள நடிகை இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளன.

ஏற்கனவே அந்த நடிகைக்கும் இளம் கிரிக்கெட் வீரருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், பின்னர் நடிகையின் கண்டிஷனுக்கு எல்லாம் சம்மதிக்க முடியாது என்பதால் நடிகையை விட்டு விலகிச் சென்று விட்டார் அந்த கிரிக்கெட் வீரர்.

இந்நிலையில், சமீப காலமாக ஷைன் ஆகி வரும் அடுத்த இளம் கிரிக்கெட் வீரரின் மேல் அந்த கவர்ச்சி நடிகையின் பார்வை விழுந்திருப்பதாகவும் தற்போது அவருடன் தான் டேட்டிங் சென்று வருகிறார் என்றும் பாலிவுட்டே பதறும் அளவுக்கு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Young actress stayed with Cricketers hotel room for a full night

லஞ்ச் மற்றும் டின்னர் என சென்று கொண்டிருந்த நடிகை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென கிரிக்கெட் வீரர் தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்கே இரவு நேரத்தில் வந்து காலிங் பெல் அடித்து இருக்கிறாராம். நடிகையை பார்த்து பதறிப்போன கிரிக்கெட் வீரர் அவரை உடனே உள்ளே அழைத்துக் கொண்டாராம். யாரும் பார்த்து விஷயம் லீக் ஆகி விடக் கூடாது என்பதற்காக இரவு முழுவதும் தனது அறையிலேயே தங்க வைத்த அந்த கிரிக்கெட் வீரர் அதிகாலையில், யாருக்கும் தெரியாமல் நடிகையை அனுப்பி வைத்ததாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

அந்த நடிகையிடம் இப்படியொரு சகவாசம் வேண்டாம் என சக கிரிக்கெட் வீரர்களே எச்சரிக்கை விடுத்து வந்தாலும், நடிகையின் அழகில் மயங்கிக் கிடக்கும் அந்த இளம் வீரர் இப்போதைக்கு யார் பேச்சையும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை என்கின்றனர். கூடிய சீக்கிரமே இருவரும் தங்கள் காதலையும் வெளிப்படையாக அறிவிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X