திருமணத்தை திடீரென நிறுத்த காரணமே இதுதானா? நடிகையின் முடிவுக்கு பின்னால் இருந்தது அவர் தானா?
சென்னை: திடீரென திருமணத்தை நிறுத்தி நடிகை பரபரப்பை கிளப்ப காரணமே இதுதானா என திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது.
மெழுகு டாலாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக தான் சினிமாவுக்கு அந்த நடிகை என்ட்ரி கொடுத்திருந்தார்.
ஒல்லி நடிகருடன் அவர் கோலிவுட்டில் நடித்த படம் ஓடவில்லை என்றாலும், நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

திருமண அறிவிப்பு
சினிமாவில் என்ட்ரி கொடுத்து சில ஆண்டுகளே ஆன நிலையில், திடீரென தொழிலதிபர் ஒருவருடன் பிரம்மாண்டமாக நிச்சயம் செய்து கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் போட்டு, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அந்த இளம் நடிகை. அதற்குள் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என சினிமா துறையினரும் அவரை நம்பி புதுப்படங்களில் கமிட் செய்யலாம் என நினைத்ததை அப்படியே கைவிட்டனர்.

கல்யாணம் வேணாம்
ஆனால், திருமண தேதி நெருங்கிய நிலையில், திடீரென திருமணமே வேண்டாம் என அதிரடியாக நடிகை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மாப்பிள்ளை வீட்டுக்காரர் எந்தவொரு தொடர்பையும் இனிமேல் வைக்கக் கூடாது என்பதையும் அதிரடியாகக் கூறி விட்டார் அந்த பஞ்சு மிட்டாய் அழகி.

ஒல்லி நடிகர் தான் காரணமா
திடீரென நடிகை தனது திருமணத்தை நிறுத்த காரணமே அந்த ஒல்லி நடிகர் தானா? என கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேச்சுக்களும் அடிபட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்சனையில் இருப்பதே வேற ஒரு நபர் என்பது தற்போது காத்துவாக்குல கசிந்துள்ளது.

மாஸ் நடிகர் படத்தில் வாய்ப்பு
திருமணத்தை நிறுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் கூட சத்தம் காட்டாமல் இருந்து வந்த அந்த நடிகை தற்போது மாஸ் நடிகர் நடித்து வரும் படத்தில் இன்னொரு ஹீரோயினாகவே இணைந்துள்ளார். இந்நிலையில், இந்த வாய்ப்புக்காகத்தான் தனது திருமணத்தையே நிறுத்திவிட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அந்த கண்டிஷன்
திருமணத்துக்கு பிறகும் நடிக்க தடை விதிக்க மாட்டேன் என வாக்கு கொடுத்த நிலையில், அவருக்கு கழுத்தை நீட்ட சம்மதித்துள்ளார். ஆனால், கடைசி நேரத்தில் அவர் நடிகையிடம் பொய் சொல்லி இருந்தது தெரியவந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் நடிகை இனிமேல் நடிக்கக் கூடாது என்பதில் தீவிரம் காட்டியது தான் அந்த நடிகை திருமணத்தை நிறுத்தவே காரணம் என்கின்றனர்.

தயாரிப்பாளருடன் நெருக்கம்
இப்படியொரு பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கும் நிலையில், அந்த பிரபல தயாரிப்பாளருடன் நடிகை ரொம்பவே நெருக்கமாக உள்ளார் என்றும் அதன் காரணமாகத்தான் திருமணத்தையும் நிறுத்தினார் என்றும் இப்போ மாஸ் நடிகர் படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தொடர்ந்து அதே தயாரிப்பாளர் படத்தில் அந்த நடிகை நடித்தால், விரைவிலேயே இந்த விவகாரத்தை கன்ஃபார்ம் செய்தே விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











