அச்சச்சோ.. அந்த இளம் நடிகை இப்போ பிரபல நடிகரின் கன்ட்ரோலில் தான் இருக்காராம்.. ஒரே புலம்பல்!
சென்னை: கோலிவுட்டுக்கு அந்த தமாஸ் ஹீரோ படத்தில் நடிக்க வந்த அந்த இளம் நடிகை தற்போது முழுமையாக அந்த பிரபல நடிகரின் கன்ட்ரோலில் தான் இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
பார்க்க ரொம்பவே அப்பாவியாக இருப்பதை போல முகத்தை வைத்துக் கொண்டு இருக்கும் அந்த இளம் நடிகைக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் விசிறிகளாகவே மாறி உள்ளனர்.
ஆனால், சமீப காலமாக நடிகையை பெரிதும் வெளியே பார்க்க முடியவில்லை என்றும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவிடுவதை கூட நடிகை தவிர்த்து வரக் காரணமே அந்த நடிகர் தான் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இளமை பொங்கும் அழகு
பக்கத்து ஸ்டேட்டில் இருந்து பார்சலாகி வந்த அந்த இளம் நடிகைக்கு ஆரம்பத்திலேயே பெரிய ஜாக்பாட் அடித்தது. அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க ஆரம்பித்த நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகின்றன.

தமாஸ் நடிகருக்கு சரியான ஜோடி
தமாஸ் நடிகர் நடிப்பில் வெளியான சில படங்களில் செம ஜோடியாக சேர்ந்து நடித்து அந்த ப்ரியமான நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இருவரும் பர்ஃபெக்ட் ஜோடி என்றே ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட ஆரம்பித்தனர். தமாஸ் நடிகரின் படத்தில் தொடர்ந்து நடித்து வந்த நடிகையின் மீது அந்த பிரபல நடிகரின் பார்வை பட்டு விட்டது.

பிரபல நடிகரின் பார்வை
உடனடியாக தனது புது படத்தில் நடிகையை கமிட் செய்த அந்த பிரபல நடிகர் சமீப காலமாக நடிகையை டோட்டலாக தனது கன்ட்ரோலிலேயே வைத்துள்ளார் என தற்போது பரபரப்பான பேச்சுகள் கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன. நடிகையையும் முன்பு போல சகஜமாக வெளியே எங்கேயும் பார்க்க முடியவில்லையாம்.

இந்த படத்தை முடித்து விட்டு
ஹீரோக்களை போல இல்லாமல் நடிகைகள் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவார்கள். ஆனால், தற்போது அந்த பிரபல நடிகர் படத்தில் கமிட் ஆகி உள்ள அந்த நடிகை வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்பது தான் ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகரின் கன்ட்ரோலில்
தனது படத்தை முடித்து விட்டு வேறு புதிய படத்தில் நடிக்க போகலாம் என நடிகைக்கு நடிகர் அன்புக் கட்டளை போட்டுள்ள நிலையில், நடிகரின் கன்ட்ரோலில் தற்போது நடிகை அந்த ஒரு படத்தில் மட்டுமே மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறாராம். இதற்கு காரணம் அவரது கதாபாத்திரம் சற்றே வித்தியாசமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உருவாகி வருவது தான் எனக் கூறுகின்றனர்.

நடிகை புலம்பல்
செம ஜாலியாக படங்களில் நடித்து வந்த நடிகையை தற்போது பெண்டு நிமிர்த்தி வரும் நிலையில், எப்போதுதான் இந்த படத்தை முடித்து விட்டு வெளியேறப் போகிறோமோ என நடிகையும் புலம்பித் தள்ளி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், படம் வெளியான பிறகு நடிகைக்கு நிச்சயம் பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். வெயிட் பண்ணிப் பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











