அட்ஜெஸ்ட்மென்ட் விஷயத்துல எனக்கு ரோல் மாடல் அந்த டாப் ஹீரோயின் தான்.. ஓபனா பேசும் இளம் நடிகை!
ஹைதராபாத்: திரையுலகில் இளம் நடிகையாக அடியெடுத்து வைத்திருக்கும் அந்த கிளாமர் குயின் வெளிப்படையாகவே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசி வருகிறாராம்.
சினிமாவில் சீக்கிரம் பெரிய ஹீரோயினாக வளர வேண்டும் என்றால் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றும் பல முன்னணி நடிகைகளே இதனை கடந்து வந்தவர்கள் தான் என தனது நெருங்கிய தோழியிடமே ஓபனாக இது பற்றி இளம் நடிகை பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், அந்த ஒரு பிரபல நடிகை சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாக காரணமே அவர் செய்த அட்ஜெஸ்ட்மென்ட் தான் என அதற்கும் ஒரு ரோல் மாடலை நடிகை உதாராணமாக கூறியது தான் அவரது தோழியையே அதிர வைத்துள்ளது என்கின்றனர்.

வாய்ப்புக்காக படுக்கைக்கு
கோடிக் கணக்கில் ஹீரோயின்கள் தங்களது திறமையான நடிப்புக்காக சம்பளம் வாங்கி வரும் நிலையில், முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கவும் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் படங்களில் தொடர்ந்து நடிக்கவும் நடிகைகளை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளதாக பல முன்னணி நடிகைகளே வெளிப்படையாக பேசி அதிர்ச்சியை அளித்துள்ளனர்.

அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை
ஒரு பக்கம் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் சொல்லி வந்தாலும், யார் செய்றாங்க, எந்த இயக்குநர், எந்த நடிகர், எந்த தயாரிப்பாளர் என்பதை யாருமே வெளிப்படுத்தாமல், எனக்கும் காஸ்டி கெளச் பிரச்சனை வந்துச்சு, சினிமாவில் அந்த தொல்லை நிறையவே இருக்கு என்றும் ஆனால், தனக்கு இதுவரை அப்படியொரு பிரச்சனையே வந்தது இல்லை என்றும் சொல்லி முடிக்கின்றனர்.

அதெல்லாம் பிரச்சனை இல்லை
இந்நிலையில், இளம் தெலுங்கு நடிகை ஒருவர் அதெல்லாம் தனக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்றும் சினிமாவில் சாதிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும் வெளிநாடுகளில் நடிகர்கள் எப்படியெல்லாம் நடிக்கிறாங்க, இதையெல்லாம் பார்த்தால் ஆகுற கதையா என தனது தோழியிடமே வெளிப்படையாக கூறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த நடிகை தான் ரோல் மாடல்
இது ஒன்றும் இங்கே புதிதாக இப்போ நேற்று நடக்கவில்லை என்றும் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்றும் அந்த பிரபல நடிகை தான் தனக்கு இந்த விஷயத்தில் ரோல் மாடலே என்றும் அவரை போல தானும் டாப் நடிகையாக போவதாகவும் பேசி அவரது தோழியையே பகீர் ஆக்கி உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.


Click it and Unblock the Notifications











