Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கேவலமா பேசுறாங்க.. தொடர்ந்து நடிச்சா அப்படித்தான் நினைப்பாங்களா? கொழுந்து விட்டு எரியும் நடிகை!
சென்னை: கலர் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை திறமையான நடிப்பு இருந்தா போதும் என தொடர்ந்து நிரூபித்து வருகிறார் அந்த 'திரி' நடிகை.
ஆனால், திரியை கொளுத்தாமல் இருக்க முடியுமா? என சிலர் அவரை பற்ற வைத்து பார்க்க பயங்கரமாக வெடித்திருக்கிறார்.
தொடர்ந்து அந்த நடிகருடனே நடித்து வருவதால் ஏகப்பட்ட சிக்கலில் சிக்கி இருக்கிறாராம் அந்த நடிகை என பரபரப்பாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன்..ஆதாரத்துடனே கிசுகிசு பேசுகிறேன்.. பயில்வான் ரங்கநாதன்!
எப்போதாவது தான்
வெள்ளைத் தோல் போர்த்திய உடம்பு தான் ஹீரோயினுக்கு ஏற்றது என எண்ணிக் கொண்டிருக்கும் இந்த சினிமா உலகில் எப்போதாவது தான் அத்திப் பூத்தது போல சில நடிகைகள் கலர் முக்கியமில்லை திறமை தான் முக்கியம் என உணர்த்தி பட்டையை கிளப்புவது வழக்கம். தற்போது தமிழ் சினிமாவில் வெகு சில நடிகைகளே அதை சாதித்துக் காட்டி வருகின்றனர். ஆனாலும், முன்னணி ஹீரோக்களுக்கெல்லாம் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்காது என்பது தான் நிதர்சனமாக உள்ளது.
ஜோடி பொருத்தம் பிரமாதம்
சில நல்ல நடிகர்கள் 3 ஹீரோயின் வேண்டும் 4 ஹீரோயின் வேண்டும், பாம்பே மாடல் தான் வேண்டும், கேரள அழகி தான் வேண்டும் என்றெல்லாம் கேட்காமல், கதைக்கு நடிக்கக் கூடிய நடிகை இயக்குநர் யாரை ஓகே பண்ணுகிறாரோ அவருடன் நடிக்கலாம் என ஒப்புக் கொண்டு நடிப்பது வழக்கம். அதுவே செட் ஆகி விட்டால், அதே நடிகையுடன் ஒரு சில படங்களில் தொடர்ந்து நடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அப்படி சமீபத்தில் ஜோடி பொருத்தம் சூப்பராக அமைந்த இருவருக்கும் இடையே ஏகப்பட்ட கிசுகிசுக்கள் முளைக்கத் தொடங்கி விட்டன.
கொளுத்திப் போட்டுட்டாங்க
தொடர்ந்து அந்த நடிகையுடனே அந்த வெரைட்டி நடிகர் நடித்து வரக் காரணம் இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையிலேயே கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க்கவுட் ஆகி விட்டது தான் என இருவரது காது படவே ஏகப்பட்ட பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில் நடிகையிடம் சினிமா பிரபலம் ஒருவரே அப்படியொரு கேள்வியை எழுப்ப தயவு செஞ்சு அப்படி மட்டும் பேசாதீங்க என கொதித்துப் போய் கத்தி விட்டாராம் அந்த திரி நடிகை.
நடிக்க வேண்டாம்
வேறு யாரும் அந்த நடிகைக்கு பெரிதாக வாய்ப்பு வழங்காத நிலையில், தொடர்ந்து இந்த நடிகரே வாய்ப்பை வாரி வழங்கி வந்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படத்தில் கூட அந்த நடிகருக்கு ஜோடியாக இல்லாமல், இன்னொரு நடிகருக்குத் தான் அவர் ஜோடியாக நடித்திருப்பார். ஆனால், கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் காட்சி ஒன்றும் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், தொடர்ந்து அவருடன் நடிப்பதை தானே தவிர்த்து விடலாம் என்கிற முடிவுக்கு நடிகையே வந்து விட்டதாகவும் பேச்சுக்கள் கிளம்பி இருக்கின்றன.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!