கெரியர் சூடு பிடித்த நேரத்தில் நடிகை ஏன் இப்படி ஒரு முடிவு?
சென்னை: இளம் நடிகை ஒருவரின் கெரியர் தற்போது சூடுபிடித்துள்ள நேரத்தில் அது பாதிக்கும் வகையில் அவர் ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.
கஷ்டப்பட்டு முன்னேறியவர் அந்த தமிழ் பேசும் நடிகை. தற்போது அவரின் கெரியர் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. முன்னணி ஹீரோவின் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி அவரின் சினிமா வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கும்போது அதற்கு ஆப்பு வைப்பது போன்று ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது நடிகை தன்னுடன் அண்மையில் நடித்த நடிகரை காதலிக்கிறார் என்றும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
காதல், திருமணம் குறித்து நடிகையின் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை. திருமண பேச்சு கிளம்பினாலே அந்த நடிகையை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் யோசிப்பார்கள்.
இந்நிலையில் நடிகை தனது கெரியர் உச்சத்தை நோக்கி செல்லும் நேரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார். அது சரி, அவர் வாழ்க்கை, அவர் கெரியர். எது நல்லது, கெட்டது என்று அவருக்கு தெரியாதா என்ன?


Click it and Unblock the Notifications











