சினிமா ஏஜென்ட்டாக மாறிய அவார்டு நடிகை.. பல பைலிங்குவலுக்கு பாலமே அவர் தானாம்?
சென்னை: சினிமா பட வாய்ப்புகள் கேட்டு அலைவதை எல்லாம் விட்டு விட்டு சினிமா பட வாய்ப்புகளை உருவாக்கி வருகிறாராம் அந்த அவார்டு நடிகை என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சுக்கள் நிலவி வருகின்றன.
சினிமாவில் நடிக்காமலே சம்பளம் வாங்குவது எப்படி என்கிற வித்தையை கற்று வைத்துக் கொண்டு கோடிக் கணக்கில் பணத்தை அள்ளி அக்கவுன்ட்டில் போட்டுக் கொண்டு வருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் பைலிங்குவல் படங்களுக்கு எல்லாமே பாலமாக அந்த நடிகை தான் தற்போது செயல்பட்டு வருவதாக புகையத் தொடங்கி உள்ளன.

ஏகப்பட்ட கிசுகிசு
சமீப காலமாக அந்த அவார்டு நடிகை பற்றிய ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிசுகிசுக்களை தாண்டி செய்திகளாகவும் அலைபாயத் தொடங்கி உள்ளன. சீக்கிரம் திருமணம் என்றும் அந்த நடிகருடன் தொடர்பில் உள்ளார் என்றும் பள்ளி காதலர் என்றும் பல பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு சினிமா ஏஜெண்டாகவே மாறிவிட்டார் என கோடம்பாக்கம் டீ கடைகளில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

நடிகர்களின் கால்ஷீட்
தன்னுடன் இணைந்து நடித்த சில நடிகர்களின் கால்ஷீட்டை மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் வாங்க வேண்டும் என்றால் முதலில் அவர்கள் அணுக வேண்டிய ஆளே இந்த நடிகை தான் என்கின்றனர். அந்த அளவுக்கு கால்ஷீட் மேனேஜராக தனது தொழிலையே மாற்றி செயல்பட்டு வருகிறாராம் அந்த நடிகை.

பைலிங்குவல் பாலம்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அந்த நடிகை நடிக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், அடுத்தடுத்து கோலிவுட் நடிகர்கள் டோலிவுட் இயக்குநர்கள் படங்களில் நடிக்க பாலமாகவே அந்த நடிகை தான் செயல்பட்டு வருகிறார் என பெரிய வெடிகுண்டையே போட்டுள்ளனர்.

சினிமா ஏஜென்ட்
அவார்டு நடிகையாக வெயிட்டு காட்டி வந்த அந்த இளம் நடிகை சமீப காலமாக சினிமா ஏஜென்ட்டாகவே டோட்டலாக மாறிவிட்டார் என்றும் இந்த தொழிலில் கோடிக் கணக்கில் பணங்களை சம்பாதிக்க முடிகிறதே என்று அறிந்து கொண்ட நிலையில், தொடர்ந்து அடுத்த அடுத்த தெலுங்கு இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கோலிவுட் நடிகர்களின் படங்களை புக் செய்து கொடுத்து கல்லா கட்டி வருகிறாராம் அந்த அவார்டு நடிகை.

அம்மாவுக்கு பிடிக்கவில்லை
நடிப்புத் தொழிலை விட்டு தேவையில்லாமல் பெரும் சிக்கலில் காசுக்காக தனது மகள் செய்து வருவதை அறிந்த அம்மாவுக்கு நடிகை செய்யும் விஷயங்கள் சுத்தமாக பிடிக்கவில்லையாம். கூப்பிட்டு கண்டித்து, உடனடியாக திருமணம் செய்து செட்டில் ஆகிற வழியை பாருன்னு சொன்னாலும் அம்மாவின் பேச்சை உதாசினப்படுத்தி விட்டு தனது வேலையை ஜரூராக நடிகை பார்த்து வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டோட்டல் சேஞ்ச்
இதற்கு முன் இருந்த ஒன்றும் தெரியாத அப்பாவி நடிகை போல எல்லாம் இப்போது அந்த நடிகை இல்லை என்றும், அவரது நடவடிக்கையில் பெரும் மாற்றமே நிகழ்ந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காத்து வாக்குல அப்படியே கசிந்து கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக கூறுகின்றனர்.

பெரிய சிக்கலில்
நடிகையின் ரூட் ஆரம்பத்தில் சரியாக இருப்பது போல தெரிந்தாலும், பண முதலைகள் நடமாடும் சினிமாவில் பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்வார் என்றே பலரும் அச்சுறுத்தி வருகின்றனர். ஆனாலும், நடிகை இப்போதைக்கு எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டேன் என தன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டு வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











