சத்தம் இல்லாமல் தயாரிப்பாளர் ஆன புஸு புஸு நடிகை
சென்னை: புஸு புஸு நடிகை பூ நடிகையுடன் சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
புஸு புஸு நடிகையின் வளர்ச்சியைத் தான் என்ன சொல்ல. சுள்ளானுடன் ஜோடி சேர்ந்த படத்தில் என்னய்யா நடிப்பே தெரியலே இந்த நடிகைக்கு என்று சொல்லும் வகையில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பில் படிப்படியாக தேர்ச்சி பெற்றார்.
ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தில் அவர் கொடுத்த பார்ட்டிகள் மிகவும் பிரபலம். கோலிவுட்டில் நுழைந்த வேகத்தில் அவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். டோலிவுட் பக்கமும் சென்று பிரபலம் ஆகிவிட்டார். இப்படி கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு நடிப்பில் பிசியாக இருக்கும் அவர் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். அதாவது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
கட்சி ஒன்றில் இருந்து விலகிய பூ நடிகையுடன் சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளாராம் நடிகை. தான் பூ நடிகையின் கணவர் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் அவர் சைலண்ட் தயாரிப்பாளராம். அதே இயக்குனரின் அடுத்த படத்திலும் அவர் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறாராம். தயாரிப்பு என்றால் தனியாக பணம் எல்லாம் போடுவது இல்லை.
சம்பளத்தை தயாரிப்புக்காக தருகிறார். தயாரிப்பு தொழில் பிக்கப் ஆனால் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கும் எண்ணமும் நடிகைக்கு உள்ளதாம்.


Click it and Unblock the Notifications










