ஹீரோவை பார்த்து ஏமாந்து போயிட்டோமே.. இயக்குநரிடம் சிக்கித் தவிக்கும் பால் வடியும் பாப்பா நடிகை!

By Staff

சென்னை: ஒழுங்கா ஸ்கூல் படிப்பையே முடிக்காத தோற்றம் கொண்ட அந்த பால் வடியும் பாப்பா நடிகை கோலிவுட்டில் பெரிய நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் உடனடியாக ஓகே சொல்லி விட்டார்.

ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காருன்னு சில முன்னணி நடிகர் விரட்டி விட்ட நிலையில், அதெல்லாம் பரவாயில்லை என பிரைட் நடிகர் ஜோடியாக்கி உள்ளார்.

ஹீரோவை பார்த்து படத்தில் நடிக்க சம்மதித்த அந்த இளம் நடிகை, தற்போது இயக்குநரின் டார்ச்சர் தாங்க முடியாமல் புலம்பி வருகிறாராம்.

பால் வடியும் பாப்பா

பால் வடியும் பாப்பா

பள்ளி படிப்பைக் கூட முடித்தாரா? இல்லையா? என்றே தெரியாத அளவுக்கு அவ்வளவு சின்ன பெண்ணாக இருக்கும் இளம் நடிகைக்கு டோலிவுட், கோலிவுட் என பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பெரிய நடிகர்களுடன் படம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், கதையை கூட கேட்காமல் உடனடியாக தலையை கொடுத்து விடுகிறாராம்.

சிக்காத நடிகைகள்

சிக்காத நடிகைகள்

அய்யோ அந்த இயக்குநரா? கொடூரமாக மூஞ்சில் கரியை அள்ளி பூசி நடிக்க வைப்பாரே என பல நடிகைகள் இந்த படத்தில் சிக்காமல் எஸ்கேப் ஆன நிலையில், பெரிய நடிகருக்கு ஜோடியாகி கோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என பலியாடாக வந்து வசமாக பிரியாணிக்கு சிக்கி இருக்கிறார் அந்த இளம் நடிகை.

ஓப்பனிங் சூப்பர்

ஓப்பனிங் சூப்பர்

ஆரம்பத்தில் எல்லாம் நல்லாதான் இருந்த நிலையில், இந்த இயக்குநரை பற்றி பலரும் தங்கச்சி அந்தப் பக்கம் போயிடாதன்னு சொல்லி பயமுறுத்தினாங்கன்னு நினைச்ச அந்த பால் வடியும் பாப்பா, தற்போது அவங்க சொன்ன அட்வைஸை கொஞ்சம் காது கொடுத்து கேட்டு இருக்கலாமோ என தற்போது ஃபீல் செய்து வருகிறாராம்.

கால்ஷீட் காலி

கால்ஷீட் காலி

கஷ்டமான காட்சிகளில் நடிப்பதை கூட சகித்துக் கொண்டு நடிகை நடித்து வந்தாலும், எப்போடா படம் டிராப் ஆகும் என்கிற பயத்துடன் நடிப்பது தான் நடிகைக்கு ரொம்பவே எரிச்சலை மூட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அவர் ஒதுக்கிய கால்ஷீட் எல்லாம் எப்பவோ காலியாகி மேலும், பல தேதிகளை இந்த படத்துக்காக இயக்குநர் முழுங்கியதால் தான் இயக்குநர் மீது ரொம்பவே கடுப்பில் இருக்கிறாராம் அந்த இளம் நடிகை.

பெயர் கிடைக்கும்

பெயர் கிடைக்கும்

இளம் நடிகையை எப்படி கன்வின்ஸ் செய்வதென்றே தெரியாமல் குழம்பிய பிரைட் நடிகரும், படப்பிடிப்பில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், படம் வெளியானால், நிச்சயம் உங்கள் உழைப்புக்கு பெயர் கிடைக்கும், ஏகப்பட்ட விருதுகளும் கிடைக்கும். படம் முடியும் வரை கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு இருங்கள் என அறிவுரையும் கூறியுள்ளதால், நடிகை சற்றே ஆறுதல் அடைந்து இருப்பதாக பேச்சுக்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X