அப்படி நடிக்கவே கூப்பிடுறாங்க.. குமுறும் இளம் நடிகை.. அவருக்கு வந்த நிலைமை வராம இருந்தா சரி!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் துணிச்சலாக படு போல்டான காட்சிகளில் நடிக்க நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஹாலிவுட் படங்கள், வெப்சீரிஸ்களில் அசால்ட்டாக பல முன்னணி நடிகைகளே அப்படி கூச்சம் இல்லாமல் நடித்து விட்டு செல்லும் நிலையில், இங்கே அப்படியெல்லாம் நடித்தால், பெரிய பஞ்சாயத்தே ஆகி விடும்.

ஆனால், அப்படி இருந்தும் சில நடிகைகள் துணிச்சலாக அது போன்ற காட்சிகளில் நடித்தால் அவர்களை டார்கெட் செய்து மற்ற இயக்குநர்களும் அவர்களையே அது போன்ற காட்சிகளில் மட்டுமே அந்த நடிகைகளை அழைப்பது மிகவும் நெருக்கடியான விஷயமாக மாறி விடுகிறது.

சில நடிகைகள்

சில நடிகைகள்

கலாச்சாரம் அதிகமாக வேரூன்றி கிடக்கும் தமிழ் சினிமாவில் நிர்வாண காட்சிகளில் பெரும்பாலும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். ஹாலிவுட் படங்களில் முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் படுக்கையறை காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடிப்பது போன்றெல்லாம் இங்கே நடித்தால், அவர்களை வேற மாதிரி பார்க்கத் தொடங்கி விடுவார்கள். மேலும், தப்பான முத்திரையும் பதிந்து விடும். ஆனாலும், அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் சில நடிகைகள் இங்கேயும் துணிந்து போல்டான காட்சிகளில் நடித்து வருகின்றனர்.

விவாகரத்து வரை

விவாகரத்து வரை

சில நடிகைகள் அப்படி போல்டாக நடித்து அவர்களது குடும்ப வாழ்க்கையே விவாகரத்து வரை சென்ற நிகழ்வுகள் எல்லாம் சமீபத்தில் நிறையவே பார்த்திருக்கிறோம். ஆனால், திருமணம் ஆகாத சில நடிகைகள், சினிமாவுக்கு புதிதாக வரும் நடிகைகள் ஆடையின்றி தைரியமாகவும் நடித்து வருகின்றனர். ரொம்பவே அரிதாக ஒரு சில படங்களில் கதையின் தேவைக்காக அப்படி நடிக்க வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இளம் நடிகைக்கு இம்சை

இளம் நடிகைக்கு இம்சை

இந்நிலையில், அப்படி சமீபத்தில் ஒரு படத்தில் இளம் நடிகை நிர்வாண கோலத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்சியில் ஆழ்த்தியிருக்கிறார். கதைக்கு தேவையான அந்த காட்சிக்காக நடிகை அப்படி நடித்த விஷயம் தெரிய வந்த நிலையில், ஒரு சில இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் படத்திலும் அப்படியொரு காட்சி இருக்கிறது, நடிக்க வாங்க என அந்த நடிகைக்கு அது போன்ற ஆஃபர்களை அள்ளி வீசி வரும் நிலையில், வீட்டிலும் சொல்ல முடியாமல், வெளியவும் சொல்ல முடியாமல் இம்சைக்குள்ளாகி வருகிறார் அந்த இளம் நடிகை.

அப்படியொரு காரியம் பண்ணிட்டாரு

அப்படியொரு காரியம் பண்ணிட்டாரு

தொடர்ந்து இது போன்ற தொல்லைகள் வரத் தொடங்கி உள்ள நிலையில், சிலர் பிராங்க் செய்யவும், சிலர் வேறு விதமான இச்சைக்காகவும் நடிகையை தொடர்பு கொள்ளவும் தொடங்கிய நிலையில், தனது போன் நம்பரையே அந்த நடிகை மாற்றி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், படத்திற்காக பேட்டி கொடுக்க சென்றாலும், அவரிடம் அதைப்பற்றியே கேள்வி கேட்பதும், அதையே டைட்டிலாக போடுவதுமாக டார்ச்சர் செய்து வருவதால், புரமோஷனையும் பெரும்பாலும் தவிர்த்து வருகிறாராம் அந்த இளம் நடிகை.

அந்த நடிகை மாதிரி

அந்த நடிகை மாதிரி

ஏற்கனவே பாதி படத்தில் ஒரு நடிகை ஒட்டுத் துணி இல்லாமல் நடிக்க வைத்து அவரை இண்டஸ்ட்ரியை விட்டே விரட்டி விட்ட வேலையை பார்த்து விட்டனர். இந்நிலையில், இந்த இளம் நடிகையையும் அப்படி மாற்றி விட வேண்டாம் என சில பிரபலங்களே அந்த நடிகைக்காக பரிந்து பேசி வருவதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X