சொதப்பிய சினிமா என்ட்ரி.. தொலைத்த இடத்திலேயே தேட கிளம்பிய நடிகை.. காரணம் அவர் தானா?

By Staff

சென்னை: அந்த ரியாலிட்டி ஷோ மூலம் ஏகப்பட்ட பிரபலங்கள் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர் என்று அவர்களே ஸ்டேட்மென்ட் கொடுத்து வரும் நிலையில், ஒரு சிலரை உச்சத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது அந்த ரியாலிட்டி ஷோ.

திறமையானவர்கள் தங்களின் திறமைகளை மக்கள் முன்பாக கடை விரித்துக் காட்டும் ஒரு இடமாகவே அந்த ரியாலிட்டி ஷோ பார்க்கப்படுகிறது.

பக்கத்தில் தேசத்தில் இருந்து அந்த ரியாலிட்டி ஷோவுக்கு வந்த அந்த பிரபலத்துக்கு வரிசையாக பட வாய்ப்புகள் அமைந்தும் ஒன்றும் விளங்காத நிலையில், மீண்டும் அதே ரியாலிட்டி ஷோவுக்கு ரிட்டர்ன் ஆகியுள்ளாராம்.

பெயர் கெட்டுப் போகுது

பெயர் கெட்டுப் போகுது

அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதை பல பிரபலங்களும் தவிர்த்து வர சொல்லும் ஒரே காரணம் தங்களது பெயர் அதில் கலந்து கொண்டால் கெட்டுப் போய்விடும் என்பது தான். ஆனால், சில பிரபலங்கள் அதில், கலந்து கொண்டு நாம் சரியாக இருந்தால், எந்த இடத்திலும் சாதிக்க முடியும் என்றும் அந்த ஷோ நம்மை நமக்கும் மக்களுக்கும் காட்டும் ஒரு கண்ணாடி தான் என்பதை நிரூபித்துள்ளனர்.

வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால்

வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால்

அந்த நிகழ்ச்சியை பெரிதும் நம்பி உள்ளே நுழைந்து பின்னர் வெளியே வந்ததும் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாமல் ட்ரோல்களே குவிவதால் தான் சிலர் இப்படி அந்த நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நல்ல பெயர்

நல்ல பெயர்

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்கத்து தேசத்து பிரபலத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. மேலும், சினிமாவிலும் அவருக்கு உடனடியாக வாய்ப்புகள் வரத் தொடங்கின. வரிசையாக சில படங்களில் சரசரவென புக்காகி நடித்தார். ஆனால், அவர் நடிப்பில் வெளியான முதல் படம் சொதப்பிய நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்.

சுமார் ரகம் தான்

சுமார் ரகம் தான்

அவர் நடிப்பில் உருவாகி வரும் மற்ற படங்களும் சுமார் ரகம் தான் என்பது அந்த நடிகைக்கே தெரிந்து விட்டது. மேலும், புதிய படங்கள் அவரை தேடி வராமல் அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியின் அடுத்த அடுத்த சீசன் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியதும் அம்மணி ஒரே அப்செட் ஆகி உள்ளார்.

மீண்டும் அதே இடத்தில்

மீண்டும் அதே இடத்தில்

அந்த ஷோவுக்கு மீண்டும் வருகிறார்கள் என்றாலே வெளியே போய் சாதிக்க முடியாதவர்கள் தான் மீண்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, நானும் லேட்டஸ்ட் பீஸ் தான் என வெளியே தனக்கும் ரசிகர்கள் செல்வாக்கு இப்பவும் உள்ளது எனக் கூறிக் கொண்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகலாம் என்பதற்காகத் தான் மீண்டும் அதே ரியாலிட்டி ஷோவுக்கு அந்த நடிகை செல்ல உள்ளார் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகிறது.

அவர் தான் காரணம்

அவர் தான் காரணம்

அந்த நடிகைக்கு கிடைக்க வேண்டிய அத்தனை புதிய பட வாய்ப்புகளையும், அந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அள்ளிக் கொண்டு விட்டதால் தான் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல், கிடைத்த படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில், தெரிந்த வேலைக்கே மீண்டும் சென்று சம்பாதிக்கலாம் என நினைத்து விட்டாராம் அந்த நடிகை என கோடம்பாக்கத்தில் ஒரே கேலிப் பேச்சாக எழுந்துள்ளது.

கழட்டிவிட்ட காதலர்

கழட்டிவிட்ட காதலர்

நிகழ்ச்சியில் காதலரை இவர் கழட்டி விட்ட நிலையில், வெளியே வந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் அந்த நடிகர் இவரை எந்த படத்திலும் ஹீரோயினாக கமிட் செய்து கொள்ளாமல் விட்டதும் நடிகைக்கு மிகப்பெரிய மன வருத்தம் எனக் கூறப்படுகிறது. இந்த முறை மீண்டும் முயற்சி செய்து பிரபலமாக துடிக்கும் அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என பெரிதும் நம்பிக்கையுடன் உள்ளாராம். ஏதோ நல்லது நடந்தால் சரி தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X