இனி கோலிவுட் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது.. இயக்குநரின் செயலால் பயங்கர கடுப்பான இளம் நடிகை!
சென்னை: பழைய நட்பு பாழாகக் கூடாதே என்பதற்காக சின்ன பட்ஜெட்டில் அந்த ஃபீல்ட் அவுட் ஆன இயக்குநருக்கு பிரைட் நடிகர் வாய்ப்பு கொடுத்த நிலையில், படத்தை இன்னமும் முடிக்காமல் தேவையில்லாத பிரச்சனைகளை பண்ணி இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார் அந்த ஜாம்பவான் இயக்குநர்.
இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தனது கரியரே காலியாகி விட்டதே என தற்போது அந்த இளம் நடிகையும் இயக்குநர் மீது பயங்கர அப்செட்டில் இனி கோலிவுட் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்கிற முடிவுக்கே அவர் வந்து விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
பணத்தையும் அதிகளவில் ஏப்பம் விட்டு விட்டார் அந்த இயக்குநர் நேரத்தையும் வீணடித்து விட்டார் என ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன.

சரியான சைக்கோ
தான் எடுப்பது தான் தரமான படம் என ஆரம்பத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த இயக்குநர் அதன் பின்னர் தொடர்ந்து ஒரு வித சைக்கோத்தனமான படங்களையே எடுக்க ஆரம்பித்த நிலையில், ரசிகர்கள் அவரது படங்கள் என்றாலே தியேட்டர் பக்கம் தலை வைத்து படுக்க பயந்து ஒதுங்க, அவரது மார்க்கெட் ஒட்டுமொத்தமாக சரிவை சந்தித்தது.

வாரிசோட வாழ்க்கையே காலி
தன்னை சிறப்பாக செதுக்கிய இயக்குநர் ஆயிற்றே தனது மகனையும் பிரபல நடிகராக மாற்றுவார் என நினைத்து வாரிசை ஒப்படைத்த நடிகருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்கிற வகையில் வைத்து செய்து விட்டார். பாவம் அந்த வாரிசு நடிகருக்கு ஆரம்பத்திலேயே எண்ட் கார்டு போடும் நிலை உருவாகி விட்டது.

உதவி செய்தவருடனே சண்டை
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே அந்த இயக்குநரை ஒதுக்கி விட்டது. குடும்பத்தில் பிரச்சனை என சுற்றிக் கொண்டிருந்தவருக்கு உதவி செய்யப் போய் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டார் அந்த பிரைட் நடிகர். 3 மாதத்தில் முடிக்கிறேன் என ஆரம்பிக்கப்பட்ட படம் சில வருடங்களையே கடந்து விடும் சூழல் உருவாகி உள்ளது.

அடிக்கடி பஞ்சாயத்து
பிரைட் நடிகருடனே அடிக்கடி பஞ்சாயத்து செய்து தான் யார் என்பதை காட்டுகிறேன் என தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார் அந்த இயக்குநர். இந்நிலையில், இளம் நடிகையும் அந்த இயக்குநர் பண்ண வேலையால் பயங்கர கடுப்பாகி விட்டார் என்று கூறுகின்றனர்.

கோலிவுட்டே வேண்டாம்
ஏற்கனவே ஒரு கோலிவுட் இயக்குநர் அந்த இளம் நடிகையை வைத்து தனது ஒட்டுமொத்த வித்தையை காட்டி படத்தையே ஓடாமல் செய்து விட்ட நிலையில், பிரைட் நடிகரை நம்பி மீண்டும் ஒரு கோலிவுட் இயக்குநர் படத்தில் நடித்து வரும் அந்த இளம் நடிகை, நான் ஒழுங்கா எங்க ஊரிலேயே நடிச்சிட்டு இருந்திருப்பேன், இப்போ என் கரியரையே அந்த இயக்குநர் காலி பண்ணிட்டாருன்னு புலம்பி வருகிறாராம். அடுத்த வருஷம் வரைக்கும் அந்த படம் வர காத்திருக்கும் நிலையில், பல பட வாய்ப்புகளையும் அந்த ஹீரோயின் மிஸ் செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











