நம்பர் ஒன் நடிகைன்னு ஆட்டம் போட்ட அதிர்ஷ்ட நடிகை.. ஒரேயடியாய் வேட்டு வைத்த நம்பர் நடிகை!
சென்னை: பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தாலும், அங்கே பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நிலையில், கோலிவுட்டுக்கு ஓடி வந்த அந்த அதிர்ஷ்ட நடிகைக்கு இங்கே அவரது அழகை பார்த்து லட்டு போல இருக்காரே என ஏகப்பட்ட நடிகர்கள் ஹீரோயின்களாக மாற்றி அழகுப் பார்த்தார்கள்.
ஆனால், எந்த படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. நடிக்கும் படமெல்லாம் நஷ்டத்தை சந்தித்த நிலையில், ராசியில்லாத நடிகை என்றே பெயர் வாங்கிய அந்த நடிகை மீண்டும் சொந்த ஊருக்கே கிளம்பிச் சென்ற நிலையில், ஆடையின்றி நடிக்க ரெடியா என வெப்சீரிஸ் இயக்குநர் கேட்க, காசு கொடுத்தா என்ன வேணா பண்ணுவேன் என நடிகை காட்டிய தாராளம் காரணமாக அந்த பெரிய வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு கிடைத்ததாம்.

அதிர்ஷ்ட நடிகைக்கு ஆப்பு: அந்த ஒரே வெப்சீரிஸில் ஓஹோ என ஓவர் நைட்டில் ஒபாமா ஆனது போல ரவுசு பண்ணி வந்த நடிகை தனக்கு இனிமேல் பாலிவுட்டில் பல படங்களும் ஹீரோக்களும் வரிசை கட்டி க்யூவில் நிற்பார்கள் என பகல் கனவு கண்டு கொண்டிருந்திருக்கிறார்.
ஆனால், சத்தமே இல்லாமல், அவருக்கு சமாதியே கட்டி விட்டாராம் இங்கிருந்து கிளம்பிச் சென்ற நம்பர் நடிகை என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நம்பர் நடிகை உச்ச நடிகரை பிடித்து நடித்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர்களின் ஒட்டுமொத்த கண்களும் நம்பர் நடிகை மீது தான் விழுந்து விட்டதாம்.
நம்பர் நடிகைக்கு வாய்ப்பு: ஏற்கனவே கோலிவுட்டில் இருந்து சென்ற சமத்து நடிகை ஒரு பிடி பிடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த பாலிவுட் கழுகுகள் அவர் நோய் வாய் பட்டு அவதிப்பட்டு வருவதை பார்த்து அப்படியே கழட்டி விட்டு விட்டனர்.
ஆனால், இந்த வயதிலும் சும்மா கின்னென இருக்கும் நம்பர் நடிகையை பார்த்ததும் அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸை சமீபத்தில் வெளியான படத்தில் பார்த்து மிரண்டு போய் விட்டார்களாம். அதிர்ஷ்ட நடிகையை புக் செய்திருந்த ஒரு சில தயாரிப்பாளர்களும் தற்போது நம்பர் நடிகையை அந்த படங்களில் நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சுவார்த்தையில் இறங்கியதை அறிந்ததுமே அப்செட் ஆன அதிர்ஷ்ட நடிகை நம்பர் நடிகை மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











