»   »  தயாரிப்பாளரின் பர்ஸில் ஓட்டையை போட்ட நடிகை

தயாரிப்பாளரின் பர்ஸில் ஓட்டையை போட்ட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கிறார் என்று கொண்டாடப்பட்ட நடிகை செய்த செயலால் தயாரிப்பாளர் கடுப்பாகிவிட்டாராம்.

அண்டை மாநிலத்தில் இருந்து வந்த மேனன் நடிகை பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பதாகக் கூறி ரசிகர்கள் கொண்டாடினார்கள். சங்க தலைவருடன் சில காலம் கிசுகிசுக்கப்பட்டார்.

Young actress upsets producer

வெயிட் போட்டுவிட்டதால் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்குகிறார்கள். அம்மணி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங்கிற்காக அவர் தனது அம்மா, பாட்டியுடன் சென்னை வந்தார். 3 நட்சத்திர ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தார் தயாரிப்பாளர். அம்மணியோ நான் தங்கினால் 5 நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவேன்.

என்னுடன் வந்திருக்கும் 3 உதவியாளர்களுக்கும் 5 நட்சத்திர ஹோட்டலில் தனித் தனி ரூம் புக் பண்ணுங்க என்று அடம் பிடித்துள்ளார். தயாரிப்பாளரும் வேறு வழியில்லாமல் 5 நட்சத்திர ஹோட்டலில் 4 ரூம் புக் செய்தாராம்.

English summary
A young actress has irritated a producer after she asked him to book 4 rooms in a five star hotel in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil