அந்த இளம் இசையமைப்பாளர் உடன் சுற்றும் பிரம்மாண்டத்தின் மகள்.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்!

By Staff

சென்னை: ஏற்கனவே அந்த இசையமைப்பாளர் உடன் பல டாப் ஹீரோயின்களுக்கே தொடர்பு இருப்பதாக போட்டோக்கள் வெளியாகி உள்ள நிலையில், அந்த பிரம்மாண்டத்தின் மகள் தற்போது இசையை சுற்றி சுற்றி வலம் வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடம் பிடித்து சினிமா நடிகையாக மாறிய அந்த பெரிய இடத்துப் பெண் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

சினிமா சூட்டிங் என செல்வார் என பார்த்தால், இசையமைப்பாளர் உடன் சுற்றி வருவது ஏன் என்கிற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.

பொல்லாத இசை

பொல்லாத இசை

பார்க்க பால் வடியும் பேபி போல முகத்தை வைத்துக் கொண்டு இருக்கும் அந்த இளம் இசையமைப்பாளர் ஆன்ட்டி நடிகைகளுடனே உதோடோடு உதடு வைத்து லிப் லாக் அடிக்கும் போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. மேலும், அவார்டு நடிகையுடன் அவர் குடித்து விட்டு கும்மாளம் போட்டதாகவும் கோடம்பாக்கமே அதிரும் அளவுக்கு தகவல்கள் வெளியாகின.

வாரிசு நடிகை

வாரிசு நடிகை

பிரம்மாண்டத்தின் வாரிசு சமீபத்தில் சினிமா நடிகையாக மாறிய நிலையில், தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இவருக்கு மட்டும் வந்த உடனே எப்படி சான்ஸ் குவியுது என சில இளம் நடிகைகள் ஓப்பனாகவே தங்களது எதிர்ப்பை தெரிவித்து பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தனர்.

இசை பின்னால் சுற்றுகிறாராம்

இசை பின்னால் சுற்றுகிறாராம்

சினிமாவில் படுபிசியாக நடித்து வரும் அந்த இளம் நடிகை ஏன் திடீரென அந்த இளம் இசையமைப்பாளருடன் சுற்றி வருகிறார் என பலரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்து பார்த்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏதாவது கனெக்‌ஷன் ஆரம்பித்து விட்டதா என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

எல்லாம் அதுக்காகத்தான்

எல்லாம் அதுக்காகத்தான்

ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லையாம். அந்த வாரிசு நடிகையும் பாடகர் என்பதால் தான் இசையமைப்பாளருடன் ரொம்பவே நெருக்கம் காட்டி வருகிறாராம். அவர் இசையில் சில பாடல்களை பாடும் வாய்ப்புகளை பெற உள்ளார் என்று கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தின் மகள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என படு உஷாராகத்தான் பணியாற்றி வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பறந்த எச்சரிக்கை

பறந்த எச்சரிக்கை

நீங்க பாட சான்ஸ் கேட்டுத்தான் அந்த இசையமைப்பாளருடன் சுத்துறீங்க.. அதெல்லாம் சரி தான். ஆனால், பையன் ஒரு மாதிரி பார்த்து உஷாராவே இருங்க என சில பிரபலங்களே நடிகையை அழைத்து தனிப்பட்ட முறையில் எச்சரித்துள்ளதாக பரபரப்பு தகவல் கோடம்பாக்கத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X