அப்பா வயது நடிகரை நம்பி ஏமாந்த நடிகை.. ஓராண்டில் வாழ்க்கையே போச்சு.. குழந்தையுடன் புலம்பிய நடிகை!

By Staff

சென்னை: ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்த நடிகரை, நான்காவதாக ஏமாந்து போய் திருமணம் செய்து கொண்ட இளம் நடிகை, ஒரு வருடத்திலேயே அவரை விட்டு பிரிந்தார். பெண்கள் விஷயத்தில் வீக்கான அந்த மூத்த நடிகர், தன்னை உண்மையாக காதலிப்பதாக நினைத்து, இளம் நடிகை அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த மூத்த நடிகர் திருந்தாததால் அவரை விட்டு பிரிந்தார்.

தமிழில் பல விருதுகளை பெற்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அந்த இளம் நடிகை. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே 20க்கும் அதிகமான படங்களில் நடித்தார். நன்கு வளர்ந்து விட்ட அந்த இளம் நடிகை கதாநாயகியாக நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றதால், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். அடுத்தடுத்து ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த போது, மூத்த நடிகர் ஒருவரின் படத்தில் நடித்தார்.

gossip kishu kishu

மூத்த நடிகர் மீது வந்த காதல்: அந்த மூத்த நடிகருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றது தெரிந்தும். தன்னை அந்த மூத்த நடிகர் காதலிப்பதாக சொல்ல, அந்த காதலை நம்பிய அந்த இளம் நடிகை, தனது 19வது வயதில் தன்னை விட 20 வயது மூத்த நடிகரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால், பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் காதல் கண்ணை மறைத்துவிட்டதால், ஓடி போய் திருமணம் செய்து கொண்டார். பின் திருமணமான ஜோரில் பெற்றோர் வேண்டாம், சினிமா வேண்டாம் என முடிவு எடுத்து சினிமாவை விட்டு விலகினார்.

வேறு நடிகையுடன் தொடர்பு: ஆனால், ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று சொல்லுவது போல, அந்த மூத்த நடிகருக்கு, இளம் நடிகையின் மீது இருந்த மோகம் தீர்த்துவிட்டதால், தன்னோடு நடித்த வேறு ஒரு நடிகையுடன் பழக ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் சினிமா வட்டாரத்திற்கு தெரியவர, அது வீட்டில் இருந்த இந்த இளம் நடிகையின் காதுக்கு வந்துள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் வந்த நிலையில், இனி இவருடன் வாழவே வேண்டாம், இனியும் இவர் திருந்தமாட்டார் என முடிவு செய்து 4 மாத கர்ப்பிணியாக இருந்த போது அந்த இளம் நடிகை கணவரை விட்டு பிரிந்தார்.

வைராக்கியமான நடிகை: தன்னுடைய 19 வயதில் கர்ப்பிணியான வாழ வழியில்லாமல் தெருவில் நின்ற அந்த நடிகை மீண்டும் பெற்றோரின் காலில் விழுந்து வாழ்க்கையை தொடங்கினார். அதுமட்டுமில்லாமல், அந்த குழந்தையை பெற்றெடுத்து நல்ல படியாக படிக்க வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், அந்த மூத்த நடிகர் இறந்த போது கூட, தன்னுடைய குழந்தைக்கு. அப்பா யார் என்று தெரியக்கூடாது என்று வைராக்கியத்துடன், மூத்த நடிகரின் இறப்புக்கு கூட போகவில்லையாம். 19 வயதில் வாழ்க்கையை தொலைத்த அந்த நடிகை தற்போது சீரியலில் மாமியார், அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X