அதுக்குள்ள ராசி இல்லாத நடிகை ஆயிட்டேனா.. புலம்பும் இளம் நடிகை!
Recommended Video
சென்னை: பெயரிலேயே ராசி வைத்துள்ள அந்த இளம் நடிகை, வி நடிகருடன் நடித்து சமீபத்தில் வெளியான அந்த டபுள் டார்ச்சர் படம் சரியாக ஓடவில்லையாம்.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த அந்த இயக்குநருடன் மீண்டும் கை கோர்க்க வேண்டாம் என பலரும் சொல்லியும் கேட்காமல், அந்த வி நடிகர் நட்புக்காக இணைந்து தற்போது வம்பில் மாட்டிக் கொண்டார்.
அந்த வி நடிகரை நம்பி நடிக்க வந்த அந்த இளம் நடிகையை ராசி இல்லாத நடிகை என கோலிவுட் தயாரிப்பாளர்கள் ஓரங்கட்ட துவங்கி விட்டார்களாம்.

ஆரம்பம்
நம்பர் நடிகையின் படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான அந்த இளம் நடிகை, அடுத்து ஜெயமான நடிகர் படத்தில் அடங்காமல் நடித்து அமர்க்களப்படுத்தினார். தொடர்ந்து இரு படங்கள் ஹிட் அடித்த நிலையில், அடுத்து கோலிவுட் கோட்டையை தான் தான் பிடிக்கப் போகிறோம் என மனப்பால் குடித்த அந்த நாயகிக்கு அடுத்த வந்த தோல்விகளால் அப்செட்டாகி உள்ளார்.

ராசி இல்லையா
பெயரிலேயே ராசி வைத்திருக்கும் அந்த நடிகை எனக்கா ராசி இல்லை என புலம்பி வருகிறாராம். எல்லாவற்றுக்கும் காரணம் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்தது தானாம்.

வி நடிகர்
முன்னணி நடிகர்கள் என்று இரண்டு வி நடிகர்களுடன் அந்த இளம் நடிகை இணைந்து நடித்தார். அடுத்தடுத்து வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இரண்டு வி நடிகர்களின் படங்களும் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் தோல்வியை சந்தித்த நிலையில், கோலிவுட்டில் புதிதாக எந்த படத்திலும் கமீட் ஆகாமல், டோலிவுட்டுக்கே திரும்பியுள்ளாராம்.

மொழிப் பிரச்சனை
கோலிவுட்டில் புதிய படங்களை வளைத்து போட முடியாததற்கு, தனக்கு இருக்கும் மொழிப் பிரச்சனை தான் காரணம் எனக் கூறியுள்ள அந்த இளம் நடிகை, தீவிரமாக தமிழ் மொழியை கற்று வருகிறார். விரைவில், கோலிவுட்டில் தான் விட்ட இடத்தை பிடிப்பேன் என்றும் ஆர்வத்துடன் கூறி வருகிறார்.


Click it and Unblock the Notifications











