30 லட்சம் வச்ச வேட்டு.. அடுத்தடுத்து அந்த நடிகை வேண்டாம் என அலறும் ஹீரோக்கள்.. இப்படி ஆகிப்போச்சே?
சென்னை: வாம்மா மின்னல் என வந்த வேகத்தில் நடிகைக்கு ராஜ போக வாழ்க்கை கிடைத்ததும் அவர் தான் வேண்டும் என இளம் நடிகர்கள் வரிசை கட்ட தொடங்கினர். எல்லாம் அமோகமாக போகிறதே என நடிகையும் ஜாலி மூடில் ஏகப்பட்ட பார்ட்டிகளுக்கு அழைக்கிறார்களே என றெக்கை கட்டி பறக்கத் தொடங்கிய நிலையில், எல்லாமே ரிவர்ஸ் கியரில் போய்விட்டது தான் நடிகையை தற்போது ரொம்பவே அப்செட்டில் ஆளாக்கி வைத்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
வம்பு நடிகரின் படம் கிடைத்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த நடிகைக்கு தற்போது அந்த படமே இல்லாமல் போனது தெரிந்து ரொம்பவே விரக்தியில் இருக்கிறாராம். மியூசிக் நடிகர் படத்தில் தேவையில்லாமல் தலை கொடுத்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே படமும் பிடிக்காமல், கதையும் பிடிக்காமல் ரொமான்ஸ் காட்சிகளில் மியூசிக் நடிகர் ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வதை பார்த்து கடுப்பாகி விட்டார் என்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் காரணமே அந்த 30 லட்சம் மேட்டர் தான் என்பதை அறிந்துக் கொண்ட நடிகை, பேசாமல் கோலிவுட்டை விட்டு கிளம்பி விடலாமா? என்கிற மன நிலைக்கே வந்துவிட்டார் என திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
அவசரப்படக் கூடாது: சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என கிடைக்கும் வாய்ப்புகளை அள்ளி போட்டுக் கொண்டு, அட்வான்ஸ் உடன் தயாரிப்பாளர்கள் வாசலில் நின்றால், கதை கூட கேட்காமல் காதை பொத்திக் கொண்டு காசை மட்டுமே குறியாக பார்த்து வாங்கி போட்டுக் கொண்டு விடுவார்கள். அதனால் தான் ஒரு சில ஆண்டுகளில் பட வாய்ப்புகளே இல்லாமல், ஃபிளாப் குயின் என்கிற பட்டத்துடன் இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுக்கப்பட்டு விடுவார்கள். ஆனால், டாப் நடிகைகளாக பல ஆண்டுகளாக வலம் வரும் சிலர், அவசரப்படாமல் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் தான் நிலைத்து நிற்கின்றனர் என்கின்றனர்.
லைன் கட்டிய நடிகர்கள்: ஒரு படம் ஓடியதும் ஏகப்பட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியாக அந்த லோக நாயகி மாறினார். உடனடியாக மற்ற நடிகைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு அந்த லட்டு நடிகையை புக் பண்ணுங்கப்பா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலரும் நடிகைக்கு அட்வான்ஸ் தொகைகளை அள்ளிக் கொடுத்தனர். ஆனால், இப்போ நிலைமையே தலை கீழாக மாறிவிட்டது என்கின்றனர்.
30 லட்சத்தால் மூட்டைக் கட்டும் நடிகை: பார்ட்டிகளில் அதிகமாக நடிகையின் தலை தென்பட்ட நிலையில், ஏகப்பட்ட தவறான வதந்திகளை நடிகையின் பெயரில் கிளப்பி விட்டு காலி செய்துவிட்டனர். ஒரு நைட்டுக்கு 30 லட்சம் வாங்குகிறார் நடிகை என பரவிய விஷயம் தான் தற்போது நடிகைக்கு அடுத்தடுத்து சிக்கலை உருவாக்கி விட்டதாகவும் அட்வான்ஸ் கொடுத்தவர்கள் எல்லாம் அம்போ என டாட்டா காட்டி விட்டு அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி வருவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகை அப்செட்: ஜாலியாக ரீல்ஸ் போட்டு ரசிகர்களையும் ஹீரோக்களையும் வசீகரித்து வந்த நடிகை இப்போ ஆளே ரொம்ப அப்செட் ஆகி ஆன்லைனையும் ஆஃப் செய்துவிட்டாராம். சீக்கிரமே, பெயர் டேமேஜ் அதிகம் ஆவதற்குள் கோலிவுட்டை காலி பண்ணவும் முடிவு செய்திருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











