பெரிய நடிகருக்கு கதை ரெடி: இம்முறை இந்தியில் இருந்து உருவிய இயக்குனர்
சென்னை: இளம் இயக்குனர் ஒருவர் தனது படத்திற்கு எங்கிருந்து கதையை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இளம் இயக்குனர் ஒருவர் பெரிய ஹீரோவை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். அந்த படத்தில் அந்த ஹீரோ இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அந்த கதாபாத்திரம் மற்றும் அதன் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி
ஹீரோ கதாபாத்திரம் குறித்த விபரங்களை பார்த்த உடனே இயக்குனர் எங்கிருந்து இன்ஸ்பையராகியுள்ளார் என்பது தெரிந்துவிட்டது. அவர் பாலிவுட்டில் ஹிட்டான ஒரு படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆகி தனது படத்திற்கு கதை அமைத்துள்ளார். கதையை சுடுவதை அவர் இன்ஸ்பையர் என்று தான் கூறுவார். அதனால் நாமும் அதையே மெயின்டெய்ன் செய்வோம்.

கதை
அந்த இயக்குனர் புதுப்படம் எடுக்கிறார் என்றதுமே யார் யார் பட கதையை எல்லாம் சுடப் போகிறாரோ என்று கோலிவுட்காரர்கள் லைட்டாக பயத்தில் இருந்தனர். ஆனால் அவர் பாலிவுட்டில் இருந்து இன்ஸ்பையராகிவிட்டார். சம்பந்தப்பட்ட இயக்குனரே ஏன் என் கதையை எடுத்தீர்கள் என்று கேட்க முடியாது. ஏனென்றால் அவர் இந்தி படத்தில் இருந்த விளையாட்டுக்கு பதில் வேறு விளையாட்டை வைத்துவிட்டார். அதனால் அது அவர் கதையாகிவிட்டது.

மிக்சிங்
இளம் இயக்குனர் ஒரு படக் கதையை பார்த்து இன்ஸ்பையர் ஆகும் ஆள் இல்லை. அவர் பல படக் கதைகளால் இன்ஸ்பையர் ஆகி அதை எல்லாம் ஒரு கலக்கு கலக்கி இது என் கதை என்று அளிப்பதற்கு பெயர் போனவர். அதனால் நிச்சயம் பாலிவுட் படக் கதையுடன் வேறு ஏதாவது படக் கதைகளும் சேர்த்து இருக்கலாம்.

கடுப்பு
அடுத்தவர்கள் கஷ்டப்பட்டு யோசித்து எழுதிய கதைகளை எல்லாம் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் இளம் இயக்குனர் சுடுவதில் கோலிவுட்காரர்களுக்கு எரிச்சலாக உள்ளது. கதைகளை எடுத்துப் போட்டு மிக்ஸ் செய்து புதுசு போன்று தருவதில் அவர் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











