twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைக்கு வந்தது வாய்க்கு எட்டாம போயிடுமோ.. கடையை சாத்திய நடிகர்.. புலம்பித் தவிக்கும் இயக்குநர்!

    By Staff
    |

    மும்பை: நீண்ட நாள் தவமிருந்து கிடைத்த வாய்ப்பு திடீர் என தனது கையை விட்டே விலகி விடுமோ என்கிற அச்சத்தில் இருக்கிறாம் அந்த காப்பி இயக்குநர்.

    எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வாய்ப்பு தந்த வல்லல் சிக்கலில் இருக்கும் போது படப்பிடிப்புக்கு மொத்தமாக 'நோ' சொல்லி விட்டாராம்.

    மற்ற நடிகர்களின் கால்ஷீட் எல்லாம் கரைந்து போனால் திட்டமிட்டபடி படத்தை எப்படி எடுப்பது என்கிற டென்ஷனில் புலம்பி வருகிறாராம் காப்பி இயக்குநர்.

    காத்துவாக்குல சில மொமென்ட்ஸ்.. 6 ஆண்டு காதலை கொண்டாடும் விக்கி - நயன்.. வைரலாகும் 'ரகசிய' போட்டோஸ்! காத்துவாக்குல சில மொமென்ட்ஸ்.. 6 ஆண்டு காதலை கொண்டாடும் விக்கி - நயன்.. வைரலாகும் 'ரகசிய' போட்டோஸ்!

    காப்பி அடித்தே

    காப்பி அடித்தே

    கஷ்டப்பட்டு மூளையை கசக்கி முன்னுக்கு வராமல் எத்தனையோ இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் வாய்ப்புக்காக சுற்றி வரும் நிலையில், மற்ற படங்களில் இருந்து கதையை சுட்டு பட்டி டிக்கெரிங் பார்த்தே கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்றுள்ளார் அந்த காப்பி இயக்குநர்.

    கைக்கு எட்டியது

    கைக்கு எட்டியது

    நீண்ட நாள் தவமாய் தவம் கிடந்து கிடைத்த வரத்தை பயன்படுத்த போகிறோமே என சந்தோஷம் அடைந்து அனைத்து வேலைகளையும் ஆரம்பித்த நிலையில், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற நிலைக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    திடீர் சோகம்

    திடீர் சோகம்

    கிங்காக திரையுலகையே கலக்கிக் கொண்டிருந்த அந்த நடிகரின் மகன் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், திடீரென அந்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. வேறு எதிலும் தற்போது தனது மனதை செலுத்த முடியாமல் தவித்து வருவதால் ஒட்டுமொத்த திரையுலகமும் சிக்கலில் சிக்கி உள்ளது.

    காலியாகும் கால்ஷீட்

    காலியாகும் கால்ஷீட்

    சோகத்தில் மூழ்கியுள்ள நடிகர் எந்தவொரு படப்பிடிப்பிலும் ஆர்வம் செலுத்தாமல் உள்ள நிலையில், மெகா பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் யாருமே எதையுமே சொல்ல முடியாத நிலையில் உள்ளார்களாம்.

    இயக்குநர் புலம்பல்

    இயக்குநர் புலம்பல்

    எப்படியோ அந்த பெரிய படத்தை இயக்கி ஹிட் கொடுத்ஹு விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த இயக்குநருக்கு இப்படி ஷூட்டிங் நடத்த முடியாமல் தடை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சனை எப்போது சரியாகும் நடிகர் பழையபடி எப்போது செட்டிற்கு திரும்ப போகிறார் என ஒரே கவலையில் புலம்பி வருகிறாராம்.

    English summary
    Young Director getting upset over Popular Hero not participating in Shooting over personal issue and many more celebrities call sheets also goes vein.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X