மாவட்டம் பட இயக்குனரின் பரிதாப நிலையை பார்த்தீர்களா?
சென்னை: மாவட்டம் பட இயக்குனரை பெரிய ஹீரோக்கள் விரட்டிவிட்டார்களாம்.
தளபதியை வைத்து மாவட்டம் படத்தை எடுத்த இயக்குனரின் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்கள் நான், நீ என்று வரிசையில் நின்றனர். இதையடுத்து அந்த இயக்குனர் ஆக்ஷன் கதைகளோடு பெரிய ஹீரோக்களின் வீட்டுக் கதவுகளை தட்டியுள்ளார்.
ஐயா உங்க மாவட்டம் சென்ச்சுரி போட்டது என்று கூறினாலும் அது புஸ்ஸாப்போனது எங்களுக்கு தெரியும், போயிட்டு வாங்க. உங்கள் படத்தில் நடிக்கிற மாதிரி இல்லை என்று கூறி கதவை சாத்திவிட்டார்களாம்.
இதையடுத்து பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்வதை விட்டுவிட்டு அவர் புதுமுக நடிகர்களுக்கான ஒரு கதையுடன் தயாரிப்பாளர்களை அணுகி வருகிறாராம்.
மாவட்டம் ரிலீஸான பிறகு நாம் மாநில அளவில் பிரபலமாகுவோம் என்று நினைத்த இயக்குனரின் நிலைமை இப்படி பரிதாபமாகிவிட்டது.
Comments


Click it and Unblock the Notifications