நம்பர் நடிகை கிடைத்ததும்.. கிளாமர் நடிகையை அம்போனு விட்ட இயக்குநர்.. பணமும் புகழும் படுத்தும் பாடு

By Staff

சென்னை: தமிழ் சினிமா போன்ற போட்டி நிறைந்த திரை உலகில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி அதிலே வென்று கொடி கட்டிப் பறப்பது என்பது ரொம்பவே சவாலான காரியம். அப்படியான உச்சத்தை அடைய பிரபலங்களில் வாரிசுகளுக்கே நாக்குத் தள்ளுகிறது. என்னதான் திறமை இருந்தாலும் பணம் தான் இங்கு பெரும் வேலையை செய்கிறது. பணம் படைத்த பிரபலங்களின் வாரிசுகள் பலரும் மிதப்பில் இருந்து கொண்டு திறமையை தூக்கி கடைசியாக வைத்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் சினிமா வாழ்க்கை வீணாகப் போவது மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவும் பின்னடைவை சந்திக்கிறது.

அப்படி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்க திறமையை நம்பி உள்ளே வந்தவர் தான் இந்த இளம் இயக்குநர். அவரிடத்தில் திறமை இருந்தாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை. இப்படி இருக்கையில் இந்த இயக்குநருக்கு வாரிசு நடிகர் ஒருவர் கொடுத்த வாய்ப்பு என்பது மிகவும் முக்கியமானது, படமும் நல்ல கருத்தை பேசி இருந்தாலும், படம் ரசிகர்கள் மத்தியில் சரியாக ஒர்க் -அவுட் ஆகவில்லை. இதனால் படம் தோல்வியைச் சந்தித்தது.

Young Director Leaves Glamour Actress After Falling for Top Heroine Viral Kollywood Gossip Sparks Debate

கிளாமர் நடிகை: பின்புலம் இல்லாத இயக்குநருக்கு முதல் படமே தோல்வி என்றால், அடுத்த படம் அமைவது என்பது கிட்டத்தட்ட மறு ஜென்மம் எடுத்து வருவது போன்ற ஒன்று. அப்படியான தருணத்தில் இந்த இயக்குநருக்கும் கிளாமர் நடிகைக்கும் ஏற்பட்ட நட்பு என்பது இருவருக்கும் இடையில் நல்ல புரிதலை ஏற்படுத்தியது. இயக்குநரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அந்த கிளாமர் நடிகை செய்தார்.

நம்பர் நடிகை: இப்படி இருக்கையில் இயக்குநருக்கு அடுத்த படம் கமிட் ஆனது. அதில் இயக்குநருக்கும் அவரது படத்தில் கதாநாயகியாக நடித்த நம்பர் நடிகைக்கும் ஏற்பட்ட பழக்கம் காதல், திருமணம் என அடுத்த கட்டத்திற்கு நீண்டுவிட்டது. இதனால் கிளாமர் நடிகையை இயக்குநர் கண்டு கொள்வது இல்லையாம். கிளாமர் நடிகையும் இது தொடர்பாக ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குநர் குறித்து மரியாதைக் குறைவாக பேசாமல், அவரது முடிவை மதித்து அமைதியாகவே இருக்கிறார். ஆனால் இவர்கள் குறித்து கோலிவுட்டில் பேச்சுக்கள் உருவாகும் போது, இயக்குநர் பணம் மற்றும் புகழுக்காக தான் கிளாமர் நடிகையைக் கழட்டி விட்டுவிட்டு, நம்பர் நடிகையுடன் இணைந்து கொண்டார் என்று பேச்சும் கூடவே அடிபடுகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X