உச்ச நட்சத்திரம் மட்டும் தான் வச்சு செய்வாரா?.. நான் வேகவச்சு செய்வேன்.. இளம் இயக்குநர் வேதனை?

By Staff

சென்னை: பிளான் பண்ணி பக்காவா எப்படி ஏமாத்தலாம்னு படம் எடுத்து ஒரே படத்தில் பலரது கவனத்தை கவர்ந்த அந்த இளம் இயக்குநரை உச்ச நடிகரும் பாஸ் நடிகரும் தொடர்ந்து நல்லா ஏமாத்திட்டு வராங்கன்னு சமீபத்தில் தனது நண்பரிடம் புலம்பித் தீர்த்து விட்டாராம் அந்த இளம் இயக்குநர்.

தமிழ் சினிமாவின் அடுத்த டாப் இயக்குநராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த டைரக்டர் ஆள் அட்ரஸே இல்லாமல் போய் விடுவார் போல தெரிகிறது. பல வருடங்கள் ஆபிஸ் ரூமுக்கு செல்வதோடு சரி என்றும் படப்பிடிப்பு தளத்துக்கே செல்லாமல் ஷூட்டிங் செய்வதையே மறந்து விடுவேன் போல தெரிகிறது என அழுது புலம்பியுள்ளாராம்.

Young Director lost his hope after both Top actors ruined his time and effort


இரு பெரிய நடிகர்களும் அந்த இயக்குநரை அடுத்தடுத்து நசுக்கி வரும் நிலையில், சினிமாவில் இதுதொடர்பாக யாரிடம் தனது கஷ்டத்தை சொல்லி கதறுவதே தெரியவில்லை என்கிற நிலையில் அவர் இருந்து வருகிறாராம்.

முதல் படமே சக்சஸ்: இயக்குநராக அறிமுகமான அந்த பிரபலத்துக்கு முதல் படமே வெற்றி படமாக மாறியதும் தலை கால் புரியாத சந்தோஷத்தில் ஹேப்பியாக இருந்தார். பல பிரபலங்களும் போன் செய்தும் நேரில் அழைத்தும் பாராட்டிய நிலையில், நம்ம ரேஞ்சே வேற மாதிரி மாறப் போவதாக நினைத்துக் கொண்டிருந்த இயக்குநருக்கு தற்போது 2வது படம் பண்ணுவோமா? மாட்டோமா? என்கிற கவலை அதிகரித்து விட்டதாக கூறுகின்றனர்.

வீணடித்த உச்ச நடிகர்: தம்பி கதையெல்லாம் சூப்பர் அடுத்து நாம சேர்ந்து பண்றோம் என சொல்லி அந்த இளம் இயக்குநருக்கு ஆபிஸ் போட்டு படத்தின் வேலைகளை உச்ச நடிகர் பார்க்க சொன்ன நிலையில், பல மாதங்கள் கழித்து உங்க கதை இப்போதைக்கு நமக்கு செட்டாகாது என்றும் பெரிய பட்ஜெட் வேலைக்காகாது என்றும் கூறி அனுப்பி விட்டாராம்.

வறுத்தெடுக்கும் பாஸ் நடிகர்: உச்ச நடிகர் துரத்தி விட்டால் ஏம்ப்பா கவலைப்படற நான் இருக்கேன் பார்த்துக்கிறேன் என அழைத்து வந்த பாஸ் நடிகர் பிரபல நடிகரை வைத்து அந்த இயக்குநர் இயக்கவிருந்த படத்தை இன்னமும் எடுக்கவிடாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே கால தாமதம் செய்து வருவதால் தனக்கு பல ஆண்டுகள் வீணாகி வருவதாக அப்செட் ஆகிவிட்டாராம் அந்த இளம் இயக்குநர்.

பல இயக்குநர்கள் காலி:
ஏற்கனவே பல இயக்குநர்களை அந்த பாஸ் நடிகர் இப்படித்தான் சோலியை முடித்து காலி செய்து அனுப்பியுள்ளார். சமீபத்தில் ஒரு இயக்குநரை காக்க வைத்து கடைசியில் கம்பி நீட்டிய நிலையில், இந்த இயக்குநரையும் காக்க வைத்து கஷ்டப்படுத்தி வருகிறாரே என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. இயக்குநரும் தற்போது தனது நண்பர்களிடம் தனது குறையை புலம்ப ஆரம்பித்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X