»   »  மீண்டும் கேரள நடிகையை திருமணம் செய்யும் இயக்குனர்

மீண்டும் கேரள நடிகையை திருமணம் செய்யும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மில்க் நடிகையை பிரிந்த இளம் இயக்குனர் மீண்டும் கேரளாவை சேர்ந்த நடிகையை திருமணம் செய்யப் போகிறாராம்.

தமிழகத்தை சேர்ந்த இளம் இயக்குனருக்கும், அவர் காதலித்து திருமணம் செய்த கேரளாவை சேர்ந்த மில்க் நடிகைக்கும் அண்மையில் விவாகரத்து அளித்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.

Young director to marry a Malayali actress again

இந்நிலையில் இயக்குனருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்கிறார்களாம். இயக்குனருடன் நட்பாக பழகி வரும் கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவரை அவருக்கு மனைவியாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

அந்த கேரள நடிகையை மருமகளாக தேர்வு செய்துள்ளது இயக்குனரின் தந்தையாம். இயக்குனருக்கு இரண்டாவது திருமணம் என்று கேள்விப்பட்டதற்கே மில்க் நடிகை குமுறிக் குமுறி அழுதாராம்.

இந்நிலையில் இயக்குனர் மணக்க உள்ளது தனது மாநில நடிகை என்பது தெரிந்து எவ்வளவு ஃபீல் பண்ணப் போகிறாரோ?

English summary
Buzz is that a young director who recently got divorced from his actress wife is going to marry another actress from Kerala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil