நடிகை மீது தீராத ஆசையில் இருக்கும் இயக்குநர்.. யெப்பா சுத்தி வளச்சு கைக்குள்ள போட்டுக்கிட்டாரே
சென்னை: இந்த இயக்குநர் இப்போதுதான் வளர்ந்து வரும் இயக்குநர், ஆனால் அவரது படங்களில் நடிக்க நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலருக்கும் ஆசை இருக்கிறது. காரணம் இந்த இயக்குநர் ஒரு மல்டி டேலண்டேட் ஆன இயக்குநர். இவருக்கு அவ்வப்போது தமிழ் மட்டும் இல்லாமல் மாற்று மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதையும் மிஸ் செய்யாமல் பயன்படுத்திக் கொள்வதில் தில்லாலங்கடியான இயக்குநர் தான். இப்படி இருக்கையில் இயக்குநருக்கு நடிகை மீது ஏற்பட்ட ஈர்ப்பு தற்போது ஏடாகூட விவகாரமாக மாறி நிற்கிறதாம்.
அதாவது, நடிகை மீது ஏற்பட்ட ஈர்ப்பை பார்ட்டி ஒன்றில் வெளிகாட்டி உள்ளார். ஆனால் நடிகையோ, சாரி என்று கூறி மறுத்துவிட்டாராம். நடிகை இதைச் சொன்ன பின்னர், நடிகையிடம் மிகவும் ஜென்டில் மேன் போல நடந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் இயக்குநர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படவே, நடிகை இயக்குநர் எப்போது போன் செய்தாலும் பேசும் அளவுக்கு நெருக்கம் ஆகிவிட்டாராம்.

செம்ம பிளான்: இப்படி இருக்கையில் நடிகையுடன் தொடர்ந்து நேரம் செலவிட முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த இயக்குநர், நடிகைக்காகவே கதை ஒன்றை எழுதி அதை நடிகையிடம் சொல்லி நடிக்க தேதிகளும் வாங்கிவிட்டாராம். இதில் விஷயம் என்னவென்றால் படத்தில் கதாநாயகனே இல்லை. இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக கொண்ட கதை இதில் கதாநாயகர்களுக்கு வேலை இல்லை என்று, கூறி, படத்தில் இணை தயாரிப்பாளராகவும் இயக்குநர் தான் செயல் படுகிறார்.
நடிகைக்காத்தான் எல்லாமே: இப்படி இருக்கையில் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 120 நாட்களுக்கு மேல் நடிகையிடம் கால்ஷீட் வாங்கி நடிகையுடன் அதிக அளவில் நேரம் செலவிட்டு, நடிகையை தன் வசப்படுத்தி விட்டாராம். படப்பிடிப்பு நடக்கும் போதே நடிகையின் கேரவனுக்கு சென்று காட்சியை விவரிக்கறேன் என அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாராம். இயக்குநரே இணை தயாரிப்பாளராகவும் இருப்பதால் முதன்மை தயாரிப்பாளரால் எதுவும் கூற முடியவில்லையாம். ஆனால் எல்லா முறையும் காட்சியை விவரிக்க நடிகையின் கேரவனுக்கு இயக்குநர் தான் செல்கிறாராம். இது மட்டும் இல்லாமல் படப்பிடிப்புக்கு ஒன்றாக வருவதும் போவதும் என நடிகை இப்போது இயக்குநரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறாராம். இவர்களின் ஓவர் நெருக்கம் தொடர்பான பேச்சு புகைச்சலாக சுற்றிக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications