தலைகீழாக நின்றாலும் மசியாத கோட் நடிகர்: சேதுவுக்கு ரூட் போடும் இயக்குனர்
சென்னை: இளம் இயக்குனர் தலைகீழாக நின்றாலும் கோட் நடிகர் மசியாததால் சேது நடிகரின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளாராம்.
பல படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு ஒரு கலக்கு கலக்கி புதுப்படமாக தருவதையே வழக்கமாக வைத்துள்ளார் இளம் இயக்குனர் ஒருவர். முதல் படத்தை அடுத்து அவர் இயக்கிய இரண்டு படங்களிலுமே லீடர் தான் ஹீரோ.

கோட் நடிகரை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்று துடிக்கிறார் இயக்குனர். ஆனால் அவரோ இயக்குனரை கண்டுகொள்வதே இல்லை. தலைகீழாக நின்றாலும் கோட் நடிகரின் கால்ஷீட் கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் மீண்டும் லீடரை இயக்க தயாரானார்.
லீடரோ இந்த இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்க ரொம்பவே யோசிக்கிறாராம். இந்நிலையில் இயக்குனர் தனது கவனத்தை கோலிவுட்டின் பிசியான நடிகரான சேது மீது திருப்பியுள்ளாராம்.
சேது நடிகர் ஏற்கனவே மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த இயக்குனருக்கு கால்ஷீட் தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











