»   »  ரூ.5 சி கேட்ட இயக்குனர்: தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்

ரூ.5 சி கேட்ட இயக்குனர்: தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் இயக்குனர் ஒருவர் கேட்ட சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் படம் தயாரிக்கும் திட்டத்தையே கைவிட்டுவிட்டாராம்.

பார்க்க குச்சியாக இருக்கும் அந்த இயக்குனர் தவமாய் தவமிருந்து பெரிய நடிகர் ஒருவரின் படத்தை மீண்டும் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் இயக்குனர் தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டாராம்.

இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை தேடிச் சென்று கதை சொல்கிறார்கள். இவரோ தயாரிப்பாளர்களை தனது அலுவலகத்திற்கு வரச் சொல்கிறாராம். அவர் கேட்கும் சம்பளத்தை கேட்கும் தயாரிப்பாளர்கள் தலை கிறுகிறுத்து அப்படியே சென்றுவிடுகிறார்களாம்.

இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் ஒருவர் இந்த இயக்குனர் கேட்ட ரூ.5 கோடி சம்பளத்தால் படம் தயாரிக்கும் திட்டத்தையே கைவிட்டு விட்டாராம். ஹீரோவுக்கே உங்களை விட கம்மியா தான் சம்பளம்.

ஆணியே புடுங்க வேண்டாம் என்று கூறி சென்றுவிட்டாராம் தயாரிப்பாளர்.

English summary
A young director has reportedly stunned a producer by asking Rs. 5 crore as remuneration.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil