வஞ்சப்புகழ்ச்சி அணியிலேயே மாஸ் நடிகரை மட்டம் தட்டும் இயக்குநர்.. எரிமலை எப்போ வெடிக்கப் போகுதோ?
சென்னை: மாஸ் நடிகரின் இன்ஃப்ளூயன்ஸ் தான் கடந்த படம் பாதிக்கு மேல் சொதப்பி விட்டது என பல மேடைகளில் பளிச்சென்றே சொல்லி விட்டார் அந்த இளம் இயக்குநர். மேலும், தனது அடுத்த படத்தில் நடிகரின் இன்ஃப்ளூயன்ஸுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கப் போவதில்லை என்றும் தொடர்ந்து பேசி வரும் அவர், வஞ்சப்புகழ்ச்சி அணியிலேயே நடிகரை போற்றுவது போல தூற்றி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இயக்குநரின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் நடிகருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றாலும், தொடர் சொதப்பலை தவிர்க்க பல்லைக் கடித்துக் கொண்டு நடித்து வருகிறாராம்.
ஆனால், சமீபத்தில் வெளியான அந்த அப்டேட்டில் கூட காப்பி விஷயங்கள் அதுவும் அந்த நடிகர் படத்தில் இருந்து சுட்டு இருக்கும் விஷயங்கள் நடிகர் காதுகளுக்கு எட்ட நிலையில், செம டென்ஷன் ஆகி இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

இண்டஸ்ட்ரி ஹிட் தான் குறி
என்ன தான் முன்னணி நடிகர் என மூச்சுக்கு மூவாயிரம் தடவை பேசிக் கொண்டாலும், ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடும் அளவுக்கு இதுவரை ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கூட அந்த நடிகர் கொடுத்து சாதனை செய்யவில்லை. சமீப காலமாக சீனியர் நடிகர்களும், இளம் நடிகர்களும் போட்டிப் போட்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து வரும் நிலையில், அப்படியொரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நடிகருக்கு நிறையவே இருக்கிறதாம்.

எல்லாத்துக்கும் தலையாட்டி
அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் தனது கற்பனை குதிரைகளை எல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு இந்த முறை இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு நடக்கலாம் என எல்லாத்துக்கும் தலையாட்டி வருகிறாராம் மாஸ் நடிகர். ஆனால், அவர் அமைதியானதும் இயக்குநர் ஓவராக ஆட்டம் போட தொடங்கி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

அட்டுக் காப்பி
இன்ஸ்பிரேஷன் என்கிற பெயரில் ஏற்கனவே பாஸ் நடிகரின் பழைய படங்களை பட்டி டிக்கெரிங் பார்த்து தான் இயக்குநராகவே அவர் வலம் வந்துக் கொண்டிருக்கையில், சமீபத்தில் அவர் மாஸ் நடிகருக்காக உருவாக்கிய அந்த அப்டேட் வீடியோ அப்படியே அட்டுக் காப்பி என பேச்சுக்கள் கிளம்பின. மேலும், அந்த விஷயம் நடிகரின் காதுகளுக்கு சென்ற நிலையில், இயக்குநர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் நடிகர்.

வஞ்சப்புகழ்ச்சி
நடிகரை பாராட்டுவது போல ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறாராம் அந்த இயக்குநர். எல்லாமே புரிந்தும் புரியாதது போல, என்னத்த தான் செய்யுறான், வெயிட் பண்ணி பார்க்கலாம் என தனது ஆட்களையும் அடக்கி வாசிக்க சொல்லி வருகிறாராம் மாஸ் நடிகர்.

எரிமலை எப்போ வெடிக்கும்
ஆனால், முடிந்த அளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும் என்றும் எரிமலை எப்போ வெடிக்கும் என்றே தெரியாத சூழல் தான் ஷூட்டிங் ஸ்பாட்டையே தினமும் போர்க்களமாக மாற்றி உள்ளது எனக் கூறுகின்றனர். மற்ற நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, அவர்களின் நடிப்பை நடிகருக்கு முன்னாலே புகழ்வது என எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கிறாராம் அந்த இயக்குநர்.

முழுசா முடியுமா
இயக்குநர் அதிகளவில் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு நடிகரிடம் எல்லை மீறி நடந்துக் கொண்டால் அவர் ஒரு நடமாடும் ஹை வோல்டேஜ் என்பது புரிந்து விடும் என அவரது ஆட்கள் ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்து வருகின்றனர். எடுத்துக் கொண்ட படம் முழுசா முடியுமா என்றே சந்தேகம் வருவதாக சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் புலம்பி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. வெயிட் பண்ணி பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











