என்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா? இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா?

சென்னை: தென்னிந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணம் என தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.

காதலர் படத்தில் நடித்து வரும் நிலையில் திடீரென இப்படியொரு முடிவை எடுக்க நம்பர் நடிகையை தூண்டியது அந்த விஷயம் தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், ஒருவழியாக சீக்கிரமே கல்யாண சேதி தெரிந்தால் சந்தோஷம் தான் என ரசிகர்களும் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளனர்.

நம்பர் நடிகை

நம்பர் நடிகை

தென்னிந்திய சினிமாவையே ஆட்சி செய்து வருகிறார் நம்பர் நடிகை. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறி வருவதால் கோடிக் கணக்கில் சம்பளமும் வாங்குகிறார்.

பிரபலங்களுடன் காதல்

பிரபலங்களுடன் காதல்

பல வருடங்களாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் அந்த நம்பர் நடிகைக்கு விரல் நடிகருடனும், நடன இயக்குநர் ஒருவருடனும் ஏற்கனவே காதல் ஏற்பட்டு பின்னர் பிரேக் அப் ஆனது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இளம் இயக்குநர் ஒருவரை ரொம்பவே உருகி உருகி லவ் பண்ணி வருகிறார்.

செல்ஃபி மழை

செல்ஃபி மழை

இதுவரை இல்லாத அளவுக்கு இவர் தான் என் புருஷன் என அறிவிக்காத குறையாக ஏகப்பட்ட நெருக்கமான ரொமான்டிக் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து தள்ளி இருக்கிறார். இந்த நட்சத்திர ஜோடியின் புகைப்படங்கள் வெளியானாலே அது தான் அந்த வாரத்திற்கே டிரெண்டான விஷயமாக சினிமா உலகில் மாறி உள்ளது.

அடுத்த மாதம் திருமணம்

அடுத்த மாதம் திருமணம்

கடந்த சில மாதங்களாகவே இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டாவது இவர்களுக்கு திருமணம் நடக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், திடீரென அடுத்த மாதமே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரபரப்பான தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

அந்த நடிகை தான்

அந்த நடிகை தான்

கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கும் நிலையில், இப்போ ஏன் இந்த திடீர் திருமண பேச்சுக்கள் எழுகிறது என்று பார்த்தால், எல்லாத்துக்கும் காரணம் தற்போது நடித்து வரும் படத்தில் இணைந்து நடித்து வரும் இன்னொரு பிரபல நடிகை தான் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்கின்றனர்.

ஒன்றும் ஆகாது

ஒன்றும் ஆகாது

திருமணத்திற்கு பிறகும் நம்பர் ஒன்னாக ஜொலிக்கலாம். நானும் அப்படித்தான் முதலில் பயந்தேன். ஆனால், இப்போ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாருடனும் முன்பு போலவே இணைந்து நடித்து தான் வருகிறேன் என தெளிவு படுத்தியதன் விளைவாகவே இந்த திருமண முடிவை நம்பர் நடிகை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கப் படுகிறது.

அறிவிக்கவில்லை

அறிவிக்கவில்லை

ஆனால், இது தொடர்பாக இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. கூடிய சீக்கிரமே மாப்பிள்ளை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப் படுகிறது. நம்பர் நடிகை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அறிந்த மாப்பிள்ளை வீட்டார் ரொம்ப ஹேப்பியாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வெளியானால் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்றாக சேர்ந்து தம்பதியினரை வாழ்த்து மழையில் நனைத்து விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X