திருட்டுத் தொழிலில் ஈடுபடும் ஜில் ஜில் ரமாமணி... சம்பாதிக்க இதை விட என்ன என்னமோ செய்றாராம்?

By Staff

சென்னை: பெயரிலேயே குளிர்ச்சியை கொண்ட அந்த ஜில் ஜில் ரமாமணி நடிகை திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன. சினிமா படங்கள் பெரிதாக கிடைக்காத நிலையில், கவர்ச்சிகரமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சீக்கிரம் பணக்காரியாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் தேவையில்லாத வேலைகளில் அதிகம் ஈடுபட்டு வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

இளம் நடிகைகள் எளிதில் சம்பாதித்து விட வேண்டும் என ஏகப்பட்ட கிராஸ் வேலைகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 100 சதவீதம் நம்பலாம் என்றும் நம்பி முதலீடு செய்யுங்க என்றும் ரசிகர்களை ஏமாற்றி பணத்தை கறந்து வருகின்றனர். இதில், குறிப்பாக கேரளாவை சேர்ந்த நடிகைகள் தான் அதிகளவில் ரசிகர்களை ஏமாற்றி திருட்டுத் தொழில் செய்து வருவதாக திடுக்கிட வைக்கின்றனர்.

Young glam actress involved in cheating business shocks fans

சிக்கிய சீன் பாப்பா: சமீபத்தில், இந்த விவகாரத்தில் சோஷியல் மீடியாவில் சீன் போட்டு வந்த பாப்பா ஒன்று வசமாக சிக்கி தற்போது போலீஸ் விசாரணை, வழக்கு என மாட்டி முழித்து வருகிறது. 100 சதவீதம் உங்க பணத்துக்கு நான் கியாரண்டி என்றும் என்னை நம்பி இன்வெஸ்ட் பண்ணுங்க என்றும் சொல்லி வந்த அவர் தற்போது மட்டிக் கொண்டதும் நானே நம்பி ஏமாந்துட்டேன் என அழுது புலம்பி எஸ்கேப் ஆகும் வேலைகளை செய்து வருகிறார்.

ஜில் நடிகையும் மோசடி பேர் வழி தானாம்: சீன் பாப்பா மட்டுமின்றி ஜில் நடிகையும் மோசடி பேர் வழிதான் என்கிற அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சோஷியல் மீடியாவில் பிட்டு படங்களை காட்டி ரசிகர்களை மயக்கி வந்த அந்த ஜில் நடிகையும் இந்த மோசடியில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

20 லட்சம் மோசடி: இதுவரை அந்த நடிகை தனது ரசிகர்களை ஏமாற்றி 20 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும் அந்த சீன் பாப்பாவை தொடர்ந்து இவரும் சீக்கிரமே சிக்கப் போகிறார் என்றும் ரசிகர்கள் உஷாராக இருங்க என எச்சரிக்கை குரல்கள் எழுந்துள்ளது. 4 போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டது ஒரு குத்தமாய்யா இப்படியா ரசிகர்களின் பணத்தை திருடுவீங்க என அந்த நடிகையிடம் ஏமாந்த ரசிகர்கள் சிலர் தற்போது நடிகையை அசிங்க அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X