வாய்க்கொழுப்பால் போன வாய்ப்பு.. உச்சகட்ட கவர்ச்சி ரூட்டுக்கு இறங்கிய டிவி நடிகை.. இப்படி ஆகிடுச்சே?
சென்னை: சின்னத்திரையில் இருந்து சமீப காலமாக ஏகப்பட்ட டிவி நடிகைகள் சினிமாவுக்கு அப்டேட் ஆகி வருகின்றனர்.
ஆனால், அதில், பல பிரபலங்களால் சினிமாவை தாக்குப் பிடிக்கவே முடியவில்லை. சமீபத்தில் ஹீரோயினான அந்த நடிகைக்கும் இதே நிலைமை தான் உருவாகி உள்ளதாக கூறுகின்றனர்.
நடிகையின் அந்த வாய்க்கொழுப்பு பேச்சுத் தான் அவருக்கு கிடைத்த சில வாய்ப்புகளும் கடைசி நேரத்தில் மிஸ் ஆக காரணம் ஆகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமா கனவு
மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் ஏகப்பட்ட சின்னத்திரை நடிகைகள் போட்டோஷூட் போட்டே சினிமா வாய்ப்புகளை பிடித்து வருகின்றனர். சமீப காலமாக பல நடிகைகள் கலக்கும் கிளாமர் போட்டோக்களை போட்ட உடனடியாக அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால், முதல் படத்திலேயே அவர்களின் நடிப்பு பல் இளித்து நிற்க அதன் பிறகு பல நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை உருவாகின்றன.

சில நடிகைகள்
அதில், சில நடிகைகள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் நடிகைகளை தேடி குவிந்து வருகின்றன. அந்த பிரபல டிவி நடிகைக்கும் அப்படித் தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், இப்போ அம்மணியின் நிலைமை மறுபடியும் ஆரம்ப கட்ட நிலைக்கே சென்று விட்டதாக கூறுகின்றனர்.

வாய்க்கொழுப்பால் வந்த வினை
அந்த இளம் நடிகைக்கு மற்ற சக நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், கூட நடித்த நடிகர் கிண்டலாக பேசியதையே பெரிய விஷயமாக மாற்றி ஸ்கோர் செய்ய நினைத்த நடிகைக்கு கோலிவுட்டில் ரகசிய ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகருடன் சண்டை
இளம் நடிகைகள் எந்தளவுக்கு அமைதியாக இருக்கின்றார்களோ அந்த அளவுக்குத் தான் அவர்களுக்கான பட வாய்ப்புகள் கோலிவுட்டில் குவிய ஆரம்பிக்கிறது. எதிர்த்து பேசினாலோ, திமிர் தனத்தை காட்டினாலோ அதன் பின்னர், அய்யோ அந்த நடிகையா வேண்டாம்.. பிரச்சனை பண்ணுவாரு என ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விடும். நடிகருடனே அந்த இளம் நடிகை சண்டை போட்ட நிலையில், நடிகைக்கு ஏற்கனவே ஒப்பந்தமான ஒரு படத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார் என ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்டுக்கடங்காத கவர்ச்சி
அந்த பட வாய்ப்பு போனால் என்ன? என் கவர்ச்சியை காட்டி எப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்கிறேன் என பாருங்க என அந்த இளம் நடிகை அப்செட் ஆகாமல் அதிரடியாக எல்லை மீறிய கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறாராம். மேலும், சம்பள விஷயத்திலும் தாராளம் காட்டத் தயார் என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில், புதிய பட வாய்ப்புகள் வரும் என நம்பிக் கொண்டிருக்கிறார்.

பெரிய இடம்
ஆனால், இந்த இளம் நடிகை சண்டை போட்ட நடிகரின் நண்பர் பெரிய இடம் என்பதால், கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்கள் அந்த நடிகை ஃப்ரீயா நடிச்சிக் கொடுத்தா கூட படத்தில் கமிட் பண்ண மாட்டாங்க என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன. இந்த விஷயம் நடிகையை தற்போது ரொம்பவே கவலையில் ஆழ்த்தி உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











