ஆத்தாடி நான் கூட படம் ஹிட்டோன்னு நினைச்சி பயந்துட்டேன்.. செட்டிலேயே சிரித்த பபுல்கம் வாய் நடிகை!

By Staff

சென்னை: வசனத்துக்கு மட்டுமில்லை நடிப்புக்கு கூட நீங்க பபுல் கம் போட்டுக்கோங்க என அந்த இளம் கவர்ச்சி நடிகையை சினிமாவில் நடிக்க வைத்து வரும் நிலையில், நம்பர் நடிகை பற்றி அவர் பேசிய பேட்டியை இதுதான் சான்ஸ் என கோர்த்து விட்டு இருந்தார் அந்த முன்னணி நடிகை.

படம் எப்படியும் பெரிய வெற்றி அடைந்து விடும் என்கிற நினைப்பில் நடிகை பற்ற வைத்த நெருப்பு அந்த கவர்ச்சி நடிகையை கன்னா பின்னாவென கார்னர் செய்தது.

ஆனால், அதே நேரத்தில் படத்தின் ரிசல்ட்டையும் சோஷியல் மீடியா ட்ரோல்களையும் பார்த்த அந்த பபுல்கம் வாய் நடிகை செட்டிலேயே விழுந்து விழுந்து சிரித்து சக நடிகர்களிடம் நம்பர் நடிகையை பயங்கரமாக கலாய்த்து பேசி உள்ளதாக ஒற்றர்கள் சேதியை பரப்பி உள்ளனர்.

மலையாள நடிகைகள்

மலையாள நடிகைகள்

பழைய நடிகையை பற்றி பேசி இறக்கி விட்டால் தானே தான் இங்கே கொடி கட்டிப் பறக்கலாம் என நினைத்துக் கொண்டு அந்த மலையாள நடிகை முன்னணியில் கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த மலையாள நடிகையை பற்றி பேசிய விமர்சனத்தின் போது கூட அந்த நடிகை யாரை சொல்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.

இதுதான் சான்ஸ்

இதுதான் சான்ஸ்

ஆனால், சமீபத்தில் தனது படத்தின் ப்ரமோஷனுக்காக மேடையேறிய அந்த நம்பர் நடிகை நான் தான் அந்த நடிகை என்றும் என்னை பற்றித் தான் அப்படி அந்த கவர்ச்சி நடிகை பேசினார் என்றும் இதுதான் சரியான சான்ஸ் என போட்டுக் கொடுத்து பற்ற வைத்து விட்டார்.

திட்டிய ரசிகர்கள்

திட்டிய ரசிகர்கள்

நடிக்கவே தெரியாமல் பபுல் கம்மை மென்றுக் கொண்டு படம் முழுக்க வந்து செல்லும் நீயா என் தலைவியின் அபார நடிப்பை பற்றி தப்பா பேசுவது என ரசிகர்கள் ரவுண்டு கட்டி அந்த கவர்ச்சி நடிகையை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தும் ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டு துவைத்து எடுத்து விட்டனர்.

நடிகை அப்செட்

நடிகை அப்செட்

என்ன இப்படி வெளிப்படையா நம்மளை போட்டுக் கொடுத்து பங்கம் பண்ணிட்டாரே அந்த நம்பர் நடிகை என பபுல்கம் வாய் நடிகைக்கு ரொம்பவே கோபம் முற்றிய நிலையில், அப்செட் ஆக இருந்தாராம். ஆனால், தற்போது செம ஹாப்பி மூடில் நடிகை சுற்றி வருவதாக ஒரே பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

படம் ஓடல

படம் ஓடல

அப்படி ஏகப்பட்ட விஷயங்களை மனம் திறந்து பேசினாலும், நம்பர் நடிகையின் லேட்டஸ்ட் படத்தை ஒருத்தரும் வழக்கம் போல இந்த முறையும் சீண்டாமல் விட்டு விட்ட நிலையில், படத்தின் ரிசல்ட்டை அறிந்து செம சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறாராம் அந்த கவர்ச்சி நடிகை.

செட்டிலேயே சிரித்து

செட்டிலேயே சிரித்து

மேலும், புதிய படத்தில் நடித்து வரும் நிலையி, அந்த செட்டிலேயே சக நடிகர்களுடன் இந்த விஷயத்தை சொல்லி விழுந்து விழுந்து சிரித்துள்ளாராம் அந்த நடிகை என பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. இனிமேல், இருவருக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடிக்கும் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. மேலும், இந்த சந்தோஷமான செய்தியை தனது நண்பர்களுக்கு எல்லாம் போன் போட்டு சொல்லி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X