தமாஸ் ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் இடையே முற்றிய மோதல்.. ஷூட்டிங்கே நின்னுடுச்சா?
சென்னை: டைட்டிலுக்கு ஏற்ற விஷயம் உங்ககிட்ட கொஞ்சம் கூட இல்லைன்னு அந்த இயக்குநர் பேசியது தான் இந்த அளவுக்கு பிரச்சனை பெரிதாகவே காரணம் என்கின்றனர்.
அடுத்த மாஸ் ஹீரோவே தான் என சுற்றிக் கொண்டிருந்த அந்த இளம் நடிகரை ஒரே படத்தில் ஏமாற்றி காலி செய்து விட்டார் அந்த காமெடி இயக்குநர்.
இந்நிலையில், அடுத்த படம் நல்லா வரவேண்டும் என்கிற ஹீரோவின் பயம் தான் தேவையில்லாமல் அடுத்த பட இயக்குநரை தொல்லை செய்தது சண்டை பெரிதாக காரணம் என்கின்றனர்.

பயத்தில் ஹீரோ
அடுத்த படம் எப்படியும் மிஸ் ஆகக் கூடாது என்கிற நல்ல நோக்கத்துடனே அந்த நடிகர் சில விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஆனால், படத்தை இயக்கி வரும் இயக்குநருக்கு தனது வேலையில் தலையிடுவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். ஏற்கனவே சில முறை வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக கூறுகின்றனர்.

விருது பெற்ற திமிர்
இயக்குநர் இயக்கிய முதல் படத்துக்கு உயரிய விருது கிடைத்த நிலையில், ஹீரோ என்ன சஜஸன் சொன்னாலும், எல்லாம் எனக்குத் தெரியும், நீங்க சொல்றத கேட்டு நடிச்சா மட்டும் போதும் என இயக்குநர் கடுப்படிக்கவே ஹீரோ டென்ஷனாகி விட்டார் எனக் கூறுகின்றனர்.

சமாதான முயற்சி
இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முயற்சியில் உடனிருந்தவர்கள் இறங்கிய போதும் இருவரும் சமாதானமே ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் பேசிக் கொள்ளாமல் அசிஸ்டன்ட்களை வைத்து நடந்து கொண்டிருந்த ஷூட்டிங்கிற்கும் தற்போது பங்கம் வந்து விட்டதாக கூறுகின்றனர்.

ஷூட்டிங் நிறுத்தம்
பிரச்சனை ரொம்பவே பெரிதான நிலையில், தற்போது ஷூட்டிங்கே தடைபட்டு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு சம்மருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் முழுதாக படமாக்கப்பட்டு வெளியாகுமா? என்கிற கேள்வியே பெரிதாக எழுந்துள்ளது.

ஹீரோயின் சமாதானம்
நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே யார் சென்று பேசினாலும், கொஞ்சம் கூட செவி மடுத்துக் கேட்பதாக தெரியவில்லையாம். இந்நிலையில், அந்த இளம் ஹீரோயினை வைத்து சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். விரைவிலேயே பழைய பட பிரச்சனையை மறந்து விட்டு நடிகர் இயக்குநருடன் சமாதானம் ஆகி படத்தை முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











