கெஞ்சிய தமாஸ் நடிகர்.. போட்டு உடைத்த இசையமைப்பாளர்.. குடும்ப மானமே போயிடுச்சாம்!
சென்னை: தமாஸ் நடிகரை தனது தம்பி போல நினைத்து வீட்டில் விட்டது தான் அந்த இசையமைப்பாளர் பண்ண தப்பே என பரபரப்பை கிளப்பி வருகின்றனர். பல ஆண்டுகளாக எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் குடும்பத்துடன் சந்தோஷமாக இசையமைப்பாளர் வாழ்ந்து வந்த நிலையில், அவரது சந்தோஷத்தை ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைத்து விட்டாராம் தமாஸ் நடிகர்.
தனது மனைவியுடன் விவாகரத்து ஆக காரணமே இவர் தான் என்கிற பஞ்சாயத்து தான் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் தமாஸ் நடிகர் செஞ்ச வேலையை மறைமுகமாக ரிவீல் செய்து கோர்த்து விட்ட நிலையில், அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லி இசையமைப்பாளரிடம் கெஞ்சியதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு அடிப்பட்டு வருகிறது.
ஆனால், அதெல்லாம் முடியவே முடியாது என்றும் முழுசா எல்லாத்தையும் சொல்லி விடுவதற்கு முன் தனக்கு வேண்டியதை செய்யணும் என்றும் டீலிங் பேசியிருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

குடும்ப மானமே போச்சு: இதுவரை கட்டி காப்பாத்தி வந்த நடிகரின் பெயர், புகழ் மற்றும் குடும்ப மானமே அந்த இசையமைப்பாளர் சொன்ன ஒற்றை வார்த்தையால் காலியாகி விட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த நடிகர் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தவனை கீழ இறக்கி தான் எப்படி மேல வரணும் என்பதிலேயே குறியாக இருப்பவர் என்றும் பல தயாரிப்பாளர்களிடமும் பிரச்சனை பண்ணி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
கெஞ்சியும் கேட்கவில்லை: காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என நடிகர் கெஞ்சியும் இசையமைப்பாளர் கேட்காமல் அவரை பற்றிய விஷயத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தாமல் மறைமுகமாக அம்பலப்படுத்தியிருப்பதற்கு பின்னணியில் ஒரு பெரிய டீலிங் இருப்பதாகவும் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டு விட்டது.
அமைதியோ அமைதி: அமைதியாக அந்த டீலிங் முடித்து இதற்கு மேல் விஷயம் வெளியே கசியாமல் அப்படியே கமுக்கமாக முடிக்க நடிகர் இசையமைப்பாளரை வெயிட்டாக கவனிக்க முடிவு செய்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் தற்போது கிளம்பி உள்ளன.
அப்படியே அடங்கிவிடும்: இது தொடர்பாக தமாஸ் நடிகர் எந்தவொரு அறிவிப்பும் வெளியிட மாட்டார் என்றும் இதற்கு மேல் அந்த இசையமைப்பாளரும் பலரையும் தவிர்த்து விட்டு தனிமையில் இனிமை காண சென்று விடுவார் என்றும் பேசிக் கொள்கின்றனர். எப்படி இருந்தாலும், உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது. நடிகர் மீது தவறா அல்லது இசையமைப்பாளர் மீது தவறா? என்பது கூடிய சீக்கிரமே தெரிந்து விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











