கல்யாணத்துக்கு முன்னாடியே வரதட்சனை வாங்கும் ஹீரோ?.. நடிகையின் பாதி சம்பளத்தை புடுங்கிடுறாராம்!
சென்னை: கோடிக்கணக்கில் அந்த நடிகை நடித்தாலே பாக்ஸ் ஆபீஸ் கொட்டுது என ஊரே பேசிக்கொண்டிருக்க தனது காதலியிடம் இப்போதே அந்த இளம் நடிகர் வரதட்சனை வாங்கி வருவதாக பகீர் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. சாதாரண குடும்பத்தில் பெண்களை கட்டிக் கொடுக்கும் போதே பல சவரன் நகைகளை வரதட்சனையாக வாங்கி பெரும் கஷ்டத்தை பெண் வீட்டாருக்கு கொடுத்து வருகின்றனர்.
மாப்பிள்ளை டபுள் டிகிரி முடித்திருக்க வேண்டும், மாசத்துக்கே லட்சக் கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நபர்களிடம் வரதட்சனை வாங்குவதில் என்ன தவறு என்றும் அந்த சைடும் இதனை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
சிலர் மட்டுமே அதெல்லாம் தேவையில்லை என நாகரீகமாகவும் மேன்லியாகவும் நடந்துக் கொள்கின்றனர். ஆனால், அந்த யங் ஹீரோவோ பெரும் ராஜ்ஜியத்தை உருவாக்க தனது ரகசிய காதலியிடம் திருமணத்துக்கு முன்னாடியே வரதட்சனை வாங்க தொடங்கி விட்டார் என்கின்றனர்.

கோடிக்கணக்கில் சம்பளம்: இந்தியளவில் மற்ற நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ராசியான நடிகை என்கிற பெயரையே அந்த பிரபல ஆட்டக்கார நடிகை எடுத்துவிட்டாராம். சில முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இணையாகவும் தனது காதலரை விட அதிகமாகவே சம்பாதித்து வருகிறாராம் நடிகை. ஆண்டுக்கு காதலர் வாங்கும் சம்பளத்தை விட 3 முதல் 5 மடங்கு நடிகையின் வருமானம் அதிகரித்து வருவதால் இப்போதே காதலியிடம் கொக்கிப் போட்டு பணத்தை பிடுங்கி வருகிறார் என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
கல்யாணத்துக்கு முன்னாடியே வரதட்சனை: தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள அந்த யங் ஹீரோ தொடர்ந்து பல படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், காசுக்காக தனது காதலியிடம் இப்போதே வரதட்சனையாக பணம் வாங்கி படமெடுத்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. நடிகையும் தனது காதலருக்காக தாராளமாக பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்திருக்கிறாராம். நடிகரின் அடுத்த படமும் தேறவில்லை என்றால் பெரிய சிக்கலாகிவிடும் என்கின்றனர்.
எச்சரிக்கும் பெற்றோர்: நடிகை இப்படி காதலருக்கு பணம் கொடுப்பது நடிகையின் பெற்றோர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். காதலையே ரகசியமாக வைத்திருக்கும் அவர், திடீரென பிரேக்கப் செய்துவிட்டால் நீ தான் ரொம்ப கஷ்டப்படுவ என நடிகையை எச்சரிக்க, நடிகை பெற்றோர்களையே திட்டிவிட்டு சில வாரங்களாக பேசாமல் இருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











