சீனியர் நடிகைளுக்கு கொக்கிப் போடும் யங் ஹீரோ.. தமாஸ் நடிகர் ரூட்டை பிடிக்கப் போறாராம்?
சென்னை: இளம் நடிகைகளுடன் நடித்தால் பெரிய ஆளாக முன்னேற முடியாது என அந்த யங் ஹீரோவுக்கு யாரோ தூபம் போட்டிருப்பார்கள் போல தெரிகிறது. திடீரென தனது ரூட்டை மாற்றி சீனியர் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்கின்றனர். இதற்கு முன்னதாக தமாஸ் நடிகர் இதே ரூட்டை கடைபிடித்து தான் முன்னணி நடிகராக மாறினார் என்பதால் தான் இப்படியொரு முடிவை நடிகர் எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
தமாஸ் நடிகர் போலவே சினிமாவில் நுழைந்த அந்த யங் ஹீரோ அவரை போலவே டாப் ஹீரோவாக வேண்டும் என்கிற முயற்சியில் அடிக்கும் குட்டி கரணம் எல்லாம் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு பல்பு கொடுத்து கோமாளியாக மாற்றி வருகிறது.

தமாஸ் நடிகருக்கே டஃப் கொடுக்கவே ஆட்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் களமிறங்கி வரும் நிலையில், தனக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் அந்த ஒண்ணுமில்லாத ஒல்லி நடிகருக்கு கிடைக்கிறதே என்கிற பொறாமை யங் ஹீரோவுக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர்.
ரூட்டை மாத்து: தனக்கு ஏற்றவாறு இளம் நடிகைகளுடன் நடித்து வந்த யங் ஹீரோ தற்போது திடீரென ரூட்டை மாற்றியிருப்பதாக கூறுகின்றனர். நாம பிரபலம் ஆகும் வரை பிரபலமான நடிகர்களையும் நடிகைகளையும் நம்ம படங்களில் போட்டால் தான் ரசிகர்கள் மத்தியில் நம்ம முகத்தை ரிஜிஸ்டர் செய்ய முடியும் என்று கூடவே இருந்த ஒரு நண்பர் ஐடியா கொடுக்க தற்போது தனது ரூட்டையே யங் ஹீரோ மாற்றியிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
சீனியர் நடிகைகள் தான் டார்கெட்: தமாஸ் நடிகர் ஆரம்பத்தில் பெரிய நடிகராக மாற டாப் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பின்னர் இளம் நடிகைகளை ஜோடியாக்க முடிவு செய்துவிட்டார். சமீபத்தில் கூட சீனியர் நடிகையுடன் இணைந்து நடித்த படம் தான் தமாஸ் நடிகருக்கு கைகொடுத்தது என்றும் அந்த ரூட்டிலேயே போக வேண்டும் என யங் ஹீரோவுக்கு அட்வைஸ் சொல்ல தொடர்ந்து சீனியர் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டாராம் அந்த யங் ஹீரோ என்கின்றனர்.
கைகொடுக்குமா?: தமாஸ் ஹீரோவுக்கு அந்த கணக்கு வொர்க்கவுட் ஆனது போல இவருக்கும் கைகொடுக்குமா? என்பது கேள்விக்குறி தான் என்கின்றனர். கொஞ்சம் மிஸ் ஆனாலும் அடுத்த சில படங்கள் சொதப்பினாலும் யங் ஹீரோவை இண்டஸ்ட்ரியை விட்டே துரத்தி விடுவார்கள் என்றும் சிலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











