முத்த வீடியோவை 'பப்ளிசிட்டி' க்காக கசியவிட்டதே விரல் நடிகர் தானாமே!
சென்னை: விரல் நடிகரும், ஒரு நடிகையும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த வீடியோவை இணையதளத்தில் கசியவிட்டதே நடிகர் தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இணையதளத்தில் பலரும் தேடிப் பிடித்து பார்த்துக் கொண்டிருப்பது விரல் நடிகரும், நடிகை ஒருவரும் ஹோட்டல் காரிடாரில் உதட்டோடு உதடு வைத்து மெய்மறந்து முத்தம் கொடுக்கும் வீடியோவை தான். வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று விரல் நடிகர் கூறினாலும் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
இந்நிலையில் வீடியோவை கசியவிட்டதே விரல் நடிகர் தான் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நடித்து வரும் படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருப்பதால் யாரும் தன்னை பற்றி பேசுவது இல்லை என்று வருத்தப்பட்டாராம் நடிகர்.
ரூம் போட்டு யோசித்த அவர் இந்த முத்த வீடியோவை வெளியிட்டு விளம்பரம் தேடியுள்ளார். அவர் நினைத்தது போன்று தற்போது அனைவரும் அந்த வீடியோவை பற்றியும், அவரைப் பற்றியும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக அவர் நயன நடிகையை பிரிந்த பிறகு அவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










