»   »  செட்டில் ஏழரையை கூட்டும் விரல் நடிகர்: பல்லைக் கடிக்கும் இயக்குனர்

செட்டில் ஏழரையை கூட்டும் விரல் நடிகர்: பல்லைக் கடிக்கும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விரல் நடிகர் தான் நடித்து வரும் புதிய படத்தில் தனது சேட்டையை காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

விரல் நடிகர் என்றாலே சர்ச்சைகளும், வம்புகளும் இல்லாமல் இல்லை என்றாகிவிட்டது. அவர் தற்போது உடல் எடையை ஏற்றி தாடி வைத்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்தும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும் தாத்தாவாகவும் நடிக்கிறார்.

முதலில் படப்பிடிப்பில் சமத்துப் பிள்ளையாக இருந்து இயக்குனர் சொன்னபடி நடந்து கொண்டாராம். ஆனால் தற்போது அவர் தனது வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறாராம்.

என்ன படம் எடுக்கிறீர்கள். உங்களுக்கு எதுவும் சரியாகத் தெரியவில்லை என்று கூறி பல நேரம் இயக்குனரின் வேலையையும் சேர்த்து செய்கிறாராம் விரல் நடிகர்.

உங்க வேலையை மட்டும் பாருங்க என்றால் நடிகர் பேக்கப் செய்துவிடுவார் என இயக்குனர் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக உள்ளாராம். படம் நின்று விட வேண்டாம், ரிலீஸாக வேண்டும் அந்த ஆளு போக்கிலேயே போங்க என்று தயாரிப்பாளரும் இயக்குனரிடம் தெரிவித்துள்ளாராம்.

English summary
Buzz is that multi talented hero is not allowing his upcoming movie director to do his job.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil