அடுத்த படத்துக்கு தீவிரமா இறங்கிட்டாராம் அந்த யங் ஹீரோ.. கதை தேடவா?.. இல்லை அதுக்காகவாம்?

By Staff

சென்னை: இளம் நடிகர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வரும் நிலையில், அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்த முறையாவது நல்ல கதைக்காக தேட இறங்கிட்டாரே அந்த நடிகர் என நினைத்த ரசிகர்களுக்கு அதெல்லாம் கிடையாது என பகீர் கிளப்புகின்றனர்.

ஹீரோக்களில் பலர் டவுன் டு எர்த்தாக இருந்து வரும் நிலையில், சில ஹீரோக்கள் மட்டும் படம் ஓடுதோ இல்லையோ பந்தா பரமசிவமாக பேச்சில் மட்டும் எந்த குறையும் இல்லாத அளவுக்கு தான் ஒரு பிறவி நடிகன் போலவே பந்தா காட்டி வருவார்கள்.

Young hero sincerely searching heroines for his next but not good script

அந்த வகையை சேர்ந்தவர் தான் இந்த இளம் ஹீரோவும் எனக் கூறுகின்றனர். பெயரிலையே வெற்றியை வைத்துக் கொண்டால் வெற்றி கிடைத்து விடும் என நினைத்தவருக்கு தொடர்ந்து தோல்வியே பரிசாக கிடைத்து வருவதால் அப்செட் ஆகி விட்டாராம்.

ஹீரோவுக்கு பிரச்சனையே இல்லை: படங்கள் ஓடவில்லை என்றாலும் ஒரு சில ஹீரோக்கள் கவலையே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் எப்படி கமிட் ஆகி வருகின்றனர் என்கிற சந்தேகம் பலருக்கும் எழத்தான் செய்யும். அந்த இயக்குநர் சரியில்லை. அந்த ஹீரோயின் சரியில்லை. அந்த கதை சரியில்லை. நீங்க நல்லா எடுத்தா படம் சில்வர் ஜூபிளி வெற்றிப் பெறும் என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் மண்டையை கழுவியே சில நடிகர்கள் வரிசையா ஃபிளாப் கொடுத்தாலும் அடுத்தடுத்த படங்களில் புக் ஆகி வாரம் ஒரு படம் கூட ரிலீஸ் செய்து வரும் அளவுக்கு உள்ளனர்.

சம்பளம் மட்டும் ஏறாது: பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை என்றால், மார்க்கெட்டில் அந்த நடிகரின் சம்பளம் மட்டும் ஏறாது. ஏற்கனவே வாங்கிய சம்பளத்தையே அடுத்தடுத்த படங்களுக்கும் வாங்கி வருவார்கள். ஹீரோயின்கள் மட்டும் ஒரு சில படங்கள் ஓடவில்லை என்றாலே அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என முத்திரை குத்தப்பட்டு இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுக்கி வைத்து விடும் வழக்கம் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறது.

தீவிர தேடுதலில் ஹீரோ: சமத்து நடிகையை ஹீரோயினாக போட்டால் படம் ஓடுமா? பாலிவுட் நடிகையை ஹீரோயினாக கொண்டு வந்தால் படம் ஓடுமா? என கதையை பற்றி கவலைப்படாமல் இருக்கும் அந்த இளம் ஹீரோ அடுத்த படத்துக்காக 2 இளம் ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக புக் செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X