அந்த ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகிடுச்சு.. கேரவனிலேயே தங்கிக் கிடக்கும் கல்யாணமான நடிகர்?

By Staff

சென்னை: சமீபத்தில் திருமணமான நடிகர் சினிமா ஷூட்டிங்கிற்கு செல்கிறேன் என கிளம்பி விட்டு தனது கேரவனிலேயே அதிக நேரத்தை செலவழித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

ஓடிடியிலேயே படு தாராளமாக நடித்து அதிர்ச்சியை கிளப்பிய அந்த நடிகையுடன் திருமணமான நடிகருக்கு திடீரென பற்றிக் கொண்ட காதல் தீ தான் அனைத்துக்கும் காரணம் என புகையத் தொடங்கி உள்ளது.

Young hero spent lot of time with glam actress at Caravan shocks Kollywood


இந்த விவகாரம் எல்லை மீறிப் போக அந்த நடிகரை படத்தில் இருந்து அதிரடியாக அந்த இயக்குநர் தூக்கி அடித்து விட்டதாக தற்போது ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமணமான நடிகர்: தனது திறமையால் அதிரடியாக முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த இளம் நடிகர் சினிமாவில் பெரிய ஆளாக வருவது இருக்கட்டும் முதலில் உரிய நேரத்தில் திருமணம் செய்து விடலாம் என சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிகருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வரத் தொடங்கியதும் தற்போது நடிகருக்கு கொம்பு முளைத்து விட்டதாக கூறுகின்றனர்.

நடிகையுடன் காதல்: ஒவ்வொரு படத்திற்கும் ஒரு நடிகை என தொடர்ந்து மாற்றி மாற்றி நடித்து வரும் அந்த நடிகர் தற்போது அந்த கவர்ச்சிக் கன்னியுடன் இணைந்து நடித்து வரும் நிலையில், தன்னை அறியாமலே கன்ட்ரோல் இழந்து விட்டார் எனக் கூறுகின்றனர். நடிகையுடன் அதிக நேரங்களை போனில் செலவழித்து வந்த நடிகர் தற்போது தைரியமாக சூட்டிங் ஸ்பாட்டிலும் செலவழித்து வருகிறார் என்கின்றனர்.

கேரவனிலே டேட்டிங்: அந்த கவர்ச்சி நடிகையுடன் வெளியே எங்கே டேட்டிங் சென்றாலும் வீட்டில் மனைவியிடம் மாட்டிக் கொள்வோம் என்பதால் கேரவனிலேயே அதிக நேரத்தை செலவழித்து டேட்டிங் செய்து வருகிறாராம். நடிகையுடன் படு நெருக்கமாக காட்சிகளை வைத்து ஏற்கனவே அந்த இயக்குநரை டார்ச்சர் செய்த நிலையில், புதிய படத்தில் அதை விட மோசமாக நடந்துக் கொள்கிறார் நடிகர் என்கின்றனர்.

தூக்கியடித்த இயக்குநர்: நடிகர் நடித்து வரும் புதிய படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அந்த நபர் ஒன்றிரண்டு முறை நடிகரை தனியாக அழைத்தே இதெல்லாம் நல்லா இல்லை என பேசி அட்வைஸ் செய்திருக்கிறாராம். தனக்கு இருக்கும் இன்றைய மார்கெட்டுக்கு மிகவும் குறைவான சம்பளத்தில் தான் உங்க படத்தில் நடித்து வருகிறேன். இதற்கு மேல், என்னை கன்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க என தொடர்ந்து எதிர்த்து பேசி வந்த நிலையில், நடிகரை தனது படத்தில் இருந்தே நீக்கி விட்டார் என பகீர் கிளப்புகின்றனர்.

நடிகருக்கு எதிரான சதி: ஆனால், அந்த நடிகர் அப்படிப்பட்டவர் எல்லாம் இல்லைங்க இப்படி கிசுகிசுக்கள் கிளம்ப காரணமே நடிகரின் வளர்ச்சி பிடிக்காமல் அவருக்கு எதிரான நடிகர் கிளப்பி விட்ட சதி வலை தான் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். இதில், எது உண்மை? எது பொய் என்றே புரியவில்லையே என கோடம்பாக்கமே தற்போது தலைசுற்றிப் போயுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், விரைவில் நடிகர் இதையெல்லாம் கடந்து தனது வெற்றியை பெரிதாக பதிவு செய்வார் என்றும் அவரை சதிச்செயல் செய்து தடுக்க முடியாது என்றும் அவர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X