ஓவர் ஆசை.. ஏகப்பட்ட தில்லாலங்கடி.. ஒரு நாள் முழுவதும் உட்கார வைத்து தமாஸ் நடிகரிடம் விசாரணை?
சென்னை: சட்டென டாப் நடிகராக மாறிய அந்த தமாஸ் ஹீரோ வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் தொடர்ந்து அவருக்கு சம்பந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடனாளியாக இருக்கிறேன் என பலரையும் ஏமாற்றி விட்டு பல கோடி ரூபாய் சொத்துக்களை சைலன்ட்டாக அந்த தமாஸ் நடிகர் சேர்த்து வருவதாகவும், முறையாக வரி கட்டுவதில்லை என கிளம்பிய புகார்களின் அடிப்படையில் தான் இந்த ரெய்டு நடைபெற்றதாக கூறுகின்றனர்.

சமீப காலமாக வெளியே எங்கேயும் தலை காட்டாமல் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் நடிகருக்கு இப்படியொரு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கோடம்பாக்கத்தில் பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது என்கின்றனர்.
கணக்கில் வராத பணம்:
நடிகரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் சோதனை நடைபெற்ற நிலையில், அப்படியொன்று நடக்கவே இல்லை என மறுத்த நிலையில், நிஜமாகவே நடிகரை அழைத்து வார்ன் பண்ணி அனுப்பி உள்ளனர் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
ஓவர் ஆசை காரணமாக கணக்கில் வராத அளவுக்கு பணத்தை நடிகர் சைடில் சேர்த்து வருகிறார் என குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.
கடன் எல்லாம் பொய்யா கோபால்:
நடிகர் அதீத கடன் சுமையில் தவித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், திடீரென பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா ரகசியமாக நடைபெற்று வருவதாக கசிந்த தகவல் காரணமாகவே அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் என்கின்றனர்.
ஒரு நாள் முழுவதும் நடிகரை தனி அறையில் உட்கார வைத்து அவரிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சங்கடத்தில் நடிகர்:
சைலன்ட்டாக அந்த விநியோகஸ்தர் உடன் டீலிங் வைத்துக் கொண்டு தமாஸ் நடிகர் செய்து வந்தது எல்லாம் இப்படி அம்பலம் ஆகி விட்டதே என நடிகர் ரொம்பவே அப்செட்டில் உள்ளாராம்.
எல்லா கணக்கு வழக்குகளையும் சரியாகத்தானே மெயின்டெயின் பண்ணி வந்தோம் இப்படி நம்மை பற்றி யார் போட்டுக் கொடுத்து சிக்கலில் சிக்க வைத்திருப்பார். யார் அந்த கருப்பு ஆடு என்றும் தன்னுடன் இருக்கும் நபர்கள் மீதே சந்தேகக் கண்ணுடன் பார்க்க ஆரம்பித்துள்ளாராம்.
சீக்கிரமே இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டி விட்டு நிம்மதியாக படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் நடிகர் தனது அடுத்தக் கட்ட நகர்வுகளை ரொம்பவே கவனமாக கையாளப்போவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











