ஓவர் ஆட்டிட்யூட் தான் காரணமா?.. தொடர்ந்து ஃப்ளாப்.. இளம் நடிகர் இதயமே நொறுங்கிப்போச்சாம்?
சென்னை: தனக்கு சரியான டீம் கிடைத்து விட்டது என்றும் தன்னை தாங்கிப் பிடிக்கவும் தன்னை வழி நடத்தவும் சரியான ஆட்கள் உள்ளார்கள் என ரொம்பவே ஓவர் கான்ஃபிடன்ட்டில் எந்த விஷயத்தையும் சொந்தமாக சிந்திக்காமல் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு தலையாட்டி பொம்மையாகவே மாறிவிட்டது தான் அந்த யங் ஹீரோவின் வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றனர்.
யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் இன்னொரு யங் ஹீரோ போதிய முக அழகு கூட இல்லாமல் மூளை முழுக்க அறிவை வைத்துக் கொண்டு அசால்ட்டாக அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இந்த யங் ஹீரோவை கதி கலங்க வைத்து வருகிறாராம்.

தமாஸ் நடிகர் பாணியிலேயே சென்றாலே போதும் எப்படியாவது அடுத்த ஸ்டாராக மாறிவிடலாம் என நினைத்து அந்த யங் ஹீரோ கட்டும் கோட்டையில் பெரிய ஓட்டையை போடுவதே அவரது ஓவர் ஆட்டிட்யூட் தானாம்.
ஓவர் கான்ஃபிடன்ஸ்: சினிமாவில் மட்டுமின்றி அனைவருக்குமே வாழ்க்கையில் தன்னம்பிக்கை ரொம்பவே முக்கியம். ஆனால், அதுவே தலைக்கனமாக மாறி ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆக சென்றால் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் ஏகப்பட்ட இழப்புகளை சந்திக்க நேரிடும். சமிப காலமாக யங் ஹீரோ ஒருவருக்கும் இதே நிலை தான் என்றும் தொடர்ந்து அவர் அடிவாங்க காரணமே அவருடைய பலம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தான் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஓவர் ஆட்டிட்யூட்: கான்ஃபிடன்ஸை தாண்டி தான் பெரிய டீமில் இருக்கிறோம் என்றும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் அறிவு ஜீவிகள், சினிமா ஜாம்பவான்கள், தூங்கிக் கொண்டிருந்தாலும், டக்கென எழுந்து ஓடி ஜெயித்து விடலாம் என முயல் போல கனவு கண்டு கொண்டிருக்க ஆமை போல மெதுவாக சொந்த காலில் பெரிய சப்போர்ட் இல்லாமல் வரும் இளம் நடிகர்கள் எல்லாம் இந்த யங் ஹீரோவை அசால்ட்டாக ஓவர்டேக் செய்துவிட்டு வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர்.
சொந்த புத்தி தேவை: அடுத்தவர் நமக்கு ஸ்ஃபூன் ஃபீடிங் செய்து டாப்பில் கொண்டு வைத்து விடுவார் என நினைப்பதை விட்டுவிட்டு, நாம் தேர்வு செய்யும் கதை, இயக்குநர் நமக்கு செட்டாவாரா? மாட்டாரா? என்பதை சரியாக கணிக்கத் தெரிந்தால் மட்டுமே அந்த யங் ஹீரோவின் டிராக் மாறும் என்றும் வெற்றி கைகூடும் என்றும் கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர். அப்படி இல்லை என்றால் தொடர்ந்து எனக்கு மட்டும் ஏன் ஃப்ளாப் ஆகுது என இப்போ புலம்புவது போல புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











