உயர்ந்த நடிகையா, வேண்டவே வேண்டாம்: தெறித்து ஓடும் இளம் ஹீரோக்கள்
Recommended Video

சென்னை: உயர்ந்த நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இளம் நடிகர் மறுக்கிறார்களாம்.
உயர்ந்த நடிகை நடிப்பில் பிரித்து மேய்ந்துவிடுவார் என்றாலும் அவருக்கு வயது ஏறிக் கொண்டு போகிறது. அவருக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளார்களாம்.
நடிகைக்கும், வாரிசு நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று பல காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகையும் திருமணம் செய்ய வசதியாக புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள ரொம்பவே யோசிக்கிறாராம்.
இளம் ஹீரோக்களோ அவருடன் ஜோடி சேர முடியவே முடியாது என்ற அடம் பிடிக்கிறார்களாம். அவருடன் நடித்தால் அவர் எங்களுக்கு ஜோடியாக அல்ல அக்கா மாதிரி இருப்பார் என்கிறார்களாம்.
ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் அவர் பார்க்க ஆன்டி போன்று இருக்கிறார் என்று கூறியதால் அம்மணி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.


Click it and Unblock the Notifications











